Home > விளையாட்டு > என் வாழ்க்கையில் சந்தித்த மிக பெரிய தோல்வி தென்னாபிரிக்காவிடம் தோற்றதே! : மேத்யூஸ்

என் வாழ்க்கையில் சந்தித்த மிக பெரிய தோல்வி தென்னாபிரிக்காவிடம் தோற்றதே! : மேத்யூஸ்

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுவதுமாக இழந்துள்ள நிலையில் இது குறித்து இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இகருத்துத் தெரிவிக்கையில்;

“என் கிரிக்கெட் வாழ்க்கையில் எவ்வளவோ தோல்விகளை நான் பார்த்துள்ளேன். ஆனால் அணியின் தலைவராக இதுதான் மிக பெரிய தோல்வியாக கருதுகிறேன்.

எந்தவொரு ஆடுகளத்தில் விளையாடும் நோக்கத்தோடு தான் நாங்கள் இலங்கையில் பயிற்சி எடுத்தோம் மற்றும் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ளவும் சிறப்பு பயிற்சி பெற்றோம்.

ஆனாலும் அதிக அனுபவம் இல்லாத வீரர்களால் எங்களால் இதை திறம்பட கையாள முடியவில்லை.. இன்னும்,எங்கள் அணியில் இருக்கும் வீரர்களில் 3 பேர் மட்டுமே இதுவரை தென் ஆப்பிரிக்காவின் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள்…” எனவும் மேத்யூஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!