Home > Slider > மலையகத்தை அச்சுறுத்தும் மது: தடைசெய்ய ஓரணியில் திரள அழைப்பு

மலையகத்தை அச்சுறுத்தும் மது: தடைசெய்ய ஓரணியில் திரள அழைப்பு

மலையகத்தில் கடந்த காலப்பகுதியில் ஆங்காங்கே காணப்பட்ட மதுபாவணை நிலையங்கள் இன்று மக்கள் நடமாடும் பிரதான வீதிக்கருகில் மட்டுமல்லாது மூலை முடுக்கெல்லாம் மூலைத்துவிட்டது.

வியாபார நோக்கில் அரசாங்கத்தால் கடந்த காலங்களில் மந்திரிகளுக்கு வழங்கப்பட்ட சாராய தவரணை அனுமதி பத்திரங்களை விற்பணை செய்து பலர் இன்று பார் முதலாளியாகிவிட்டனர்.

இவ்வாறாக மலையக பகுதிகளில் மூலை முடுக்கெல்லாம் ஆரம்பிக்கப்பக்டுள்ள மதுவிற்பணை நிலையங்களுக்கு அப்பால் நகரத்திலிருந்து சாதாரணமாக ஒன்றுக்கு அதிகமான கிலோமீற்றர் தூரத்தில் காணப்படும் தோட்டப்பகுதிகளிலும் சட்டவிரோதமாக மதுவிற்பனை இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கெல்லாம் சென்று மது அருந்தும் நபர்கள் வயது வித்தியாசமற்று குடிக்கு அடிமையாகிவருகின்றனர்.அத்தோடு சிறியவர் பெரியவர் என வித்தியாசம் இல்லாமல் புகைப்பிடிக்கும் பழக்கங்களும் உச்ச கட்டத்தினை அடைந்துளது.

இதனால் மலையக தோட்டப்பகுதிகளில் அளவுக்கு அதிகமான கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றமையை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளது.

வீட்டு விசேடங்கள் முதல் பொதுவிடயங்கள் மற்றும் கலாச்சார நிகழ்விலும் அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட எல்லா விடயங்களிளும் கலந்து கொள்ளிளும் பெரியோர்கள் முதல் இளைஞர்கள் வரை மது அருந்திவிட்டே மலையகம் சமூகம் இன்று புதிய பாதையை வெட்டிக்கொன்று செல்கின்றது.

இந்த வகையில் இன்றைய மலையக இளைஞர் சமூகம் மது அருந்தி இரத்த சூட்டை பென்கள் மற்றும் சிறுமிகள் மீது காட்டிவருகின்றமை மலையக மக்களுக்கு சாபத்தினை ஏற்படுத்துகின்றது.

வெரிக்கிளம்பிய நாய் வேட்டைக்கு கிளம்புவது போல சிறுமிகளை இலக்கு வைத்து சில இளைஞர் பட்டாளம் காமுகர்களாக மாற்றம் பெறும் அளவிற்கு மது தன் வேளையை காட்டுகின்றது. மலையக அரசியல் வாதிகள் மேடைகளில் மது கடைகளை மூடுவதாக மக்கள் மத்தியல் வாய் கிழியபேசி விட்டு நாதியற்ற அரசியல் செய்கின்றனர்.

இது வரை எந்த மலையக அரசியல் தலைவர் மது பான கடையை மூடியதாக மக்கள் முன் கூரமுடியும் சில அரசியல் வாதிகள் மது அருந்திவிட்டுதான் கூட்டத்தினை ஆரம்பிக்கின்றார்கள் இதில் பாரை மூடுவதாக மேடையில் பேசுவது காமடியாகவுள்ளது.

அண்மையில் கந்தப்பளை தேயிலை மலை தோட்டத்தில் கடந்த 12.05.2017 அன்று 16 வயதான சிறுமியை நால்வர் மது அருந்திவிட்டு வல்லுறவுக்குட்படுத்தி மயக்கமான நிலையில் வாழை இலையால் மூடி தப்பி சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தினையும் பீதியை ஏற்படுத்தியது பாதிக்கப்பட்ட சிறுமி இன்னும் நடக்ககூட முடியாத நிலையில் உயிருக்காகவும் தனது கௌரவம் போய்விட கூடாது என நினைத்து வீட்டில் முடங்கியுள்ளார்.

காம பித்தர்களுக்கு கண்டனம் தெரிவித்து மலையக ஆய்வாளர் அமைப்புடன் இணைந்த மீணாட்சி பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஆர்பாட்டம் ஒன்றினை 21.05.2017அன்று காலை கந்தப்பளை நகரில் நடத்தியது.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் குறித்த நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என இவ் ஆர்ப்பாட்டத்தை கோசங்களை எழுப்பி கதறி பெண்கள் அழுது புலம்பினார்கள்.

இவ் ஆர்ப்பாட்டம் தேயிலை மலை தோட்ட வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக கந்தப்பளை நகரத்திற்கு வந்தது. இதில் சுமார் 300ற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டனர்.

கந்தப்பளை பொலிஸார் போராட்டத்தை முன்னெடுக்க தடைசெய்த போதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொலிஸ் அதிகாரிகள் சில பெண்களின் அடையாள அட்டைகளை கட்டாயத்தின் பேரில் வாங்கினர் ஆனால் பெண்கள் எதையும் பொருட்படுத்தாமல் நகர்தில் இறங்கி ராஜஸ்வரிக்கு நீதி வேண்டும் என குரல் எழுப்பினார்கள் அத்தோடு
பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் மக்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் சட்டவிரோத சாராய தவரணைகளை மூடு, மது அருந்தும் காமுகனிடமிருந்து எமது பிள்ளைகளை காப்பாற்று, மலையக மக்களை போதைக்கு அடிமையாக்காதே, வல்லுறவில் ஈடுப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கு என்ற வாசகங்களுக்கும், எழுப்பிய கோசங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இப்போராட்டத்தின் போது மலையக அரசியல் வாதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை எனவே அரசியல் வாதிகள் மலையக மக்களின் அபிவிருத்திக்கு தடையாக உள்ள மது அரக்கனை விரட்டி மதுவை ஒழிப்பதற்கு அனைத்து மலையக அரசியல் வாதிகள் ஒற்றுமையுடன் செயல்படுவது காலத்தின் தேவையாகும்.

அக்கரபத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!