Home > கட்டுரை > கல்கரி வெள்ளமும் கொழும்பு பள்ளமும்…!

கல்கரி வெள்ளமும் கொழும்பு பள்ளமும்…!

2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் வர்த்தக நகரான கல்கரி நகரம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.

மாலை 4 மணி இருக்கும் பொலிஸ் வாகனங்கள் அங்குமிங்கும் சமிஞ்சை சத்ததுடன் ஓடி கொண்டிருந்தன. நானும் அதனை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் அந்த ரசனை அடுத்த சில மணி நேரங்களுக்கு மாத்திரமே இருக்கும் என நான் நினைக்கவில்லை.

நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு முன்பாக பொலிஸ் வண்டியொன்று நின்றது.

” அட நாம ஒரு தவறும் செய்யவில்லையே..” என மனதில் நினைத்து பொலிசாரை பார்த்தேன்.

” உடனடியாக அனைவரும் இந்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர்.

” என்னடா ..இவங்க யாரு எங்களை வெளியே போக சொல்றது ” என மனதில் நினைத்தேன்

ஆனால் கேள்வி கேட்க வாய்ப்பே கிடைக்கவில்லை, உடனடியாக நாங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டோம்.

நாங்கள் மட்டுமல்ல அந்த பகுதியில் இருந்த அனைவரும் அகற்றப்பட்டனர்.
நமக்கு என்ன காரணம் என்று தெரியாது.
ஊடகவியலாளனாக இருந்தால் மெதுவாக கதையை ஒட்டு கேட்டேன்.

என் அருகில் இருந்த வெள்ளைக்கார அம்மணி மலைப்பகுதி ஆற்று பெருக்கெடுத்து கல்கரி நோக்கி வருவதாக சொன்னார்.

” வெள்ளம் வருகிறதா..இரண்டு நாள் தானே மழை பெய்தது” என நினைத்து காரை எடுத்து வீடு நோக்கி பறந்தேன்.

நல்ல வேளை நாங்கள் வெள்ள அபாயம் இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்தோம்.

மாலை 6 மணியளவில் வெள்ள நீர் கல்கரி downtown நகரை சுற்றி நிரம்பியது.கோடிக்கணக்கான டாலர் பெருமதியான சொத்துக்கள் அழிந்தன ஆனால் உயிர் சேதங்கள் எதுவும் இல்லை.

இங்கு அடிக்கடி வெள்ளம் வருவதில்லை.ஆனால் அரசாங்கம் அனர்த்தம் ஏற்பட முன்பே ஆயத்தங்களை திட்டமிட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் downtown நகரிற்கு அருகாமையில் வெள்ள அபாயம் உள்ள வீடுகளுக்கு உயிர் பாதுகாப்பு கருவிகளை நகர சபை வழங்கியது.

இதேபோன்று 2016 மே மாதம் எமது மாகாணத்தின் இன்னுமொரு நகரமான போர்ட் மெக்மேரியில் காட்டு தீ வந்தது ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை.

உயிருக்கு இவர்கள் செலுத்தும் கௌரவத்தை இந்த இடத்தில் நான் ஏன் பதிவு செய்கிறேன்…என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இலங்கையில் வெள்ளமும் மண்சரிவும் வருடாவருடம் வருகிறது.ஆனால் மக்கள் உயிரழப்புக்களை தடுக்க அரசாங்கத்திடம் போதிய திட்டம் இருக்கிறதா..?

சொத்துக்கள் சேதமாவதை யாராலும் தடுக்க முடியாது, ஆனால் உயிர் சேதங்களை தடுக்கலாம். இறந்த பின்னர் ஆறுதல் சொல்வதை அதனை தடுக்க முற்பட வேண்டும்.

எனக்கு அறிவு தெரிந்த காலத்தில் இருந்து கொழும்பில் சிறிய மழை பெய்தாலே ஆமர்வீதி சந்தி வெள்ள நீரில் நிரம்பிவிடும்.

அதனையே கட்டுப்படுத்த முடியாதவர்களாக நாங்கள் இருப்பது வேதனை இதில் எப்படி உயிர்களை பாதுகாக்க போகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழும்பும்.

என்ன செய்ய என் ஆதங்கத்தை சொன்னேன்..வருடா வருடம் வெள்ள நிவாரணம் கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள்.

பாதிக்கப்பட்டவர்களே..உங்களுக்கு என் ஆறுதல்..உயிரழந்த என் உறவுகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

– டன்ஸ்டன் மணி-

Leave a Reply

error: Content is protected !!