Home > Slider > வெள்ளவாயவில் நிலத்துக்கு கீழ் தமிழ் மன்னன் இராவணின் மாளிகை; தேரர் பரபரப்பு தகவல்!

வெள்ளவாயவில் நிலத்துக்கு கீழ் தமிழ் மன்னன் இராவணின் மாளிகை; தேரர் பரபரப்பு தகவல்!

சுமார் மூவாயிரம் அடி ஆழத்தில் தமிழ் மன்னன் இராவணின் மாளிகை இருப்பதாக தேரர் ஒருவர் கண்டுப்பிடித்து இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

நில்திய பொக்குன, நிலத்தடியிலேயே அமைந்துள்ளது. எல்ல, வெல்லவாய, கரதகொல்ல பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் செல்லும் போது இந்த சுரங்கப் பாதைக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ள அவர்,பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ள இந்த சுரங்கப் பாதைக்கு அந்தப் பகுதி மக்களின் உதவியின்றி செல்ல முடியாது. சுரங்கப் பாதையை பார்த்தவுடன் அச்சம் ஏற்படும் என கூறியுள்ளார்.

625

குகைக்குள் சுமார் ஐநூறு மீட்டர் தூரம் சென்ற பின்னர் மிகவும் விசாலமான மண்டப அறை ஒன்றை காணமுடியும் அத்தோடு அந்த சுவற்றின் பக்கத்தில் அடுத்த பக்கத்துக்கு செல்ல முடியும், அதோடு கயிற்றின் உதவியுடன் சுமார் முப்பது அடி கீழே இறங்கியவுடன் அங்கிருந்து சுமார் எண்ணுறு அடிக்கு கீழ் இறங்கும் போது உரையாற்றும் அரங்கு போன்ற ஒன்றை காண முடியும். அதன் ஒரு பகுதியில் நீர் வீழ்ச்சியின் சத்தம் கேட்கிறது அதில் இருந்து ஆயிரத்து ஐநூறு அடி தூரம் செல்லும் போது நீல நிறத்திலான அலங்காரத்துடனான குளம் ஒன்று உள்ளது.
இந்த நீர் ஒரு போதும் சூரிய ஒளியை கண்டதில்லை. மிகவும் சுத்தமான நீர் எங்கிருந்து வருவதென்பது மர்மமான ஒரு விடயமாகும்.

எந்தவொரு அதிர்வுகளும் இல்லாத இந்த நீல்திய பொக்குன குளம் பகுதியில் மிகவும் அலங்காரமான மாளிகை ஒன்று அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்

இதற்கு மேல் அங்கு செல்வது ஆபத்து என்பதால் அங்கிருந்து திரும்பி வந்து விட்டதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!