Home > Slider > பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!

பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு  செல்லும் பொகவந்தலாவ டின்சின் கேசல்கமுவ ஒயாவிற்கு அருகாமையில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை பொகவந்தலாவ பொலிஸார் 16.07.2017.ஞாயிற்றுகிழமை அதிகாலை 05.30மணி அளவில் கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவிலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதே இவர்கள் கைது செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

IMG_20170716_075441

இதேவேளை மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியதாகவும் சட்டவிரோத மாணிக்ககல் அகல்வில் ஈடுபட்டு வந்தவர்கள் நாவலபிட்டி பலாங்கொட பொகவந்தலாவ டின்சன் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யபட்டவர்கள் ஜந்துபேரையும் இன்றய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!