Home > மலையகம் > அட்டன் ஆட்டோ சாரதிகள் மீது குற்றச்சாட்டு; அதிக கட்டணம் அறவிடுவதாக விசனம்!

அட்டன் ஆட்டோ சாரதிகள் மீது குற்றச்சாட்டு; அதிக கட்டணம் அறவிடுவதாக விசனம்!

இன்று சகல பகுதிகளிலும் போக்குவரத்திற்காக முச்சக்கர வண்டிகளே அதிகம் காணப்படுகிறது. பொது மக்களும் தமது வசதிக்கமைய முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துகின்றனர். அதற்கமைய அட்டன் நகரில் பேருந்து நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டிகள் பல நிறுத்தப்பட்டுள்ளன இவற்றில் பெரும்பாலன வை பொதுமக்களிடமிருந்து அதிக கட்டணத்தை அறவிடுவதாக குற்றஞ் சுமத்தப்படுகிறதும் குறிப்பாக வெளிப் பிரதேசங்களிலிருந்து வருவோரிடமே இல்வாறு அதிக கட்டணங்களை அறவிடுதின்றனர்.

இது மாத்திரமன்று ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகள் இடைநடுவே வாடகைக்கு அமர்த்தியோரை இறக்கி விட்டு பேசிய தொகையை பலாத்காரமாக வாங்கிச் செல்வோரும் உள்ளதாக தெரிய வருகிறது. அவ்வாறானதொரு நிகழ்வு இன்று (16) அட்டனில் நிகழ்ந்துள்ளது.

பயணி ஒருவர் அட்டன் நகர பேருந்து நிலையத்தின் முன்னால் அமைந்துள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலிருந்து குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வாடகைக்கு அமர்த்தியுள்ளார். உண்மையான கட்டணம்
ரூ 400 . இருப்பினும் 600 ரூபா வேண்டுமென்று அவர் கேட்டுள்ளார். பின்னர் 500 ரூபாவிற்கு இணங்கி பயணத்தை தொடர்ந்தார். எவ்வாறாயினும் ஒத்துக் கொண்ட இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பாகவே பயணக் தை முடித்துக் கொண்டார். மோசமான பாதை என்றும் தனக்கு வேறொரு சவாரி இருப்பதால் இங்கு இறங்கி நடந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

அத்தோடு பயண கட்டணத்தை முழுமையாக சாரதி கேட்டு வற்புறுத்தியுள்ளார். இருந்த போதிலும் சவாரியில் சென்ற பயணி கேட்ட தொகையை விட குறைவான தொகையை கொடுக்துள்ளார் இதனால் எஞ்சிய தூரத்தை நடந்தே சென்றதாக குறித்த பயணி தெரிவித்தார். இவ்வாறு ஒரு சிலர் செயற்படுவதால் ஒட்டு மொத்த முச்சக்கர வண்டி சாரதிகளுக்கே இழுக்கை ஏற்படுத்தும் ‘. எனவே இவ்வாறான சாரதிகளுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை அட்டன் போக்குவரத்து பொலிஸாரும் அட்டன் – பிக்கோயா நகர சபையும் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. மலையக பகுதிக்கும் முச்சக்கர வண்டிகளில் வாசிப்புமாணி பொருத்தினால் பொது மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் முற்று பெறும்.

சுஜீவன்

Leave a Reply

error: Content is protected !!