Home > Slider > இதொகா இளைஞர் அணிக்குள் குழப்பம்; மாற்றுக் கட்சிக்குள் இணைய முனைப்பு!

இதொகா இளைஞர் அணிக்குள் குழப்பம்; மாற்றுக் கட்சிக்குள் இணைய முனைப்பு!

இ.தொ.கா இளைஞர் அணியின் உறுப்பினரும்,இ.தொ.கா வின் தீவிர ஆதரவாளருமான ஒருவர் தனது சகாக்களுடன் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் பொறுப்பினை ஏற்று வழிநடத்தப்போவதாக கருடனுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோாடு மேலும் பலர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவனேசன் அவர்களேடும் கைகோர்க்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.தொ.கா இளைஞர் அணி தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமைத்துவத்திலும் இளைஞர் அணி வழிநடத்தல்,செயற்பாடுகளிள் அதிருப்தி அடைந்ததனால் இவ்வாறு மாற்று கட்சிகளுக்கு ஆதரவளிக்க உளளதாக தகவல் கசிந்துள்ளது.
இ.தொ.கா இளைஞர் அணியானது இளைஞர்களுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் எதனையும் செய்ததில்லை.வெறுமனே தலைமையை மகிழ்ச்சிப்படுத்த மாத்திரம் விளம்பர அரசியல் செய்கின்றது.
இளைஞர் அணியினை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளோ இளைஞர்களுகான தேவைகளோ இ.தொ.கா இளைஞர் அணி ஊடாக முன்னெடுப்பதில்லை.

எனவே இவ்வறான செயற்பாடுகளிள் அதிருப்தி அடைந்து,தமது திறமை,தகுதிகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காத பலர் மாற்று கட்சிகளின் இளைஞர் அணிகளிள் இணைந்து செயற்பட முன்வந்துள்ளதோடு, தாம் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஆரம்பக்கட்டமாக ம.ம.மு ன் பல்வேறு பிரிவுகளிள் பல மாற்றங்கள்,முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.இதற்கு உந்துசக்தியாக மலையக மக்கள் முன்னனியின் இளைஞர் அணி வழு பெற உள்ளதோடு மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி தலைவராக குலசேகர் லீபன் தெரிவாககூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.

Leave a Reply

error: Content is protected !!