Home > மலையகம் > பதுளை லெஜர்வத்தை தோட்டத்தில் 125 வீடுகளுக்கு அடிக்கல்!

பதுளை லெஜர்வத்தை தோட்டத்தில் 125 வீடுகளுக்கு அடிக்கல்!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் மூலம் மலைநாட்டு புதிய
கிராமங்கள்,உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால்; பதுளை
லெஜர்வத்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவிருக்கும் 125 வீடுகளுக்கான
அடிக்கல் நாட்டும்நிகழ்வு (16-07-2017) நேற்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா,
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினகளான வடிவேல் சுரேஸ், ஏ. அரவிந்த குமார்
மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

Leave a Reply

error: Content is protected !!