Home > Slider > வித்யா கொலை வழக்கு பகுதி -03 “அந்த நேரம் வித்தியா ஐயோ விடுங்கடா ஐயோ விடுங்கடா என கதறினார்”

வித்யா கொலை வழக்கு பகுதி -03 “அந்த நேரம் வித்தியா ஐயோ விடுங்கடா ஐயோ விடுங்கடா என கதறினார்”

மேலும் பதில் சட்ட மா அதிபரின் உரையை தொடர்ந்து 2017/06/28 அன்று 1ஆம் நாள் விசாரணை நண்பகல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது, சந்தேகநபர்களுக்கு எதிரான திருத்தப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் பகிரங்க நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், குற்றவாளியா, சுற்றவாளியா என நீதிபதிகள் வினவியபோது, ஒன்பது சந்தேகநபர்களும் தாம் சுற்றவாளிகள் என கூறியுள்ளனர் மேலும் வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் Trial at Bar முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்ட போது இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த பதில் சட்ட மா அதிபர், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் Trial at Bar க்கு உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து முதலாம் நாள் சாட்சி பதிவில் இவ்வழக்கின் பிரதான சாட்சியான வித்யாவின் தாயாருடைய சாட்சியம் மன்றில் கேட்கப்பட்டது இதன்போது, அரச பகுப்பாய்வுத் திணைக்களம் அனுப்பி வைத்த 16 சான்றுப் பொருட்களை சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஒவ்வொன்றாகப் பிரித்து அவற்றை அடையாளம் காணுமாறு, வித்தியாவின் தாயாரிடம் கேட்டுக் கொண்டனர் அதன்படி இந்தப் பொருட்கள் அனைத்தும் தனது மகளுடையது என சிவலோகநாதன் சரஸ்வதி அடையாளம் காண்பித்துள்ளதுடன் தனது மகளான வித்தியாவின் கிழிந்த பாடசாலை சீருடை, காண்பிக்கப்பட்டபோது, அவரது தாயார் நீண்ட நேரம் கதறியழுதுள்ளார் இவ்வாறு முதலாம் நாள் விசாரணைகள் நிறைவுற்றன.

தொடர்ந்து இவ்வழக்கின் தொடர் விசாரணை 2017/06/29 அன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக ஆரம்பமாகிய போது அன்று 2 முக்கிய சாட்சிகள் சாட்சியமளித்தனர் முற்பகல் 9.30 க்கு ஆரம்பமான விசாரணைகளின்போது வழக்கின் ஐந்தாம் இலக்க சாட்சியாளரான உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் சாட்சியமளித்தார், இவர் இக்கொலை வழக்கின் 10 ஆம் இலக்க சந்தேகநபராக இருந்து பின்னர் அரச தரப்பு சாட்சியாளராக மாறும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்ற அடிப்படையில் சாட்சியாளாக மாறுவதற்கு சம்மதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது மேலும் இவர் தனது சாட்சியத்தின் போது “புங்குடுதீவு பிரதேச சபையில் சாரதியாகப் பணியாற்றிய பெரியதம்பி என்றழைக்கப்படும் துஷாந்த் என்ற ஐந்தாம் இலக்க சந்தேகநபர் வித்தியாவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்தார் என்றும் துஷாந்தின் விருப்பத்தை வித்தியா தொடர்ந்தும் மறுத்து வந்ததாகவும் வித்தியா பாடசாலைக்கு செல்லும் போதும், பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போதும் பெரியதம்பி (துஷாந்த்) மோட்டார் சைக்கிளில் பின்தொடர்வதாகவும் அவருடன் தாமும் சென்று வந்ததாகவும் கூறினார்.

மேலும் வித்யாவின் கொலை சம்பவம் இடம்பெறுவதற்கு ஒன்றரை மாதத்திற்கு முன் ஒரு நாள் மாணவி வித்தியா தனது பாதணியைக் கழற்றி பெரியதம்பிக்கு எறிந்ததாகவும் அதனால் கோவமடைந்த பெரியதம்பி தன்னையும் அழைத்துக்கொண்டு வித்தியாவின் வீட்டுக்கு சென்றதாகவும் வீட்டில் எவரும் இருக்காததால் திரும்பி வந்ததாகவும் கூறினார்”
மேலும் பெரியதம்பியும் தானும் (சாட்சி) வழமையாக கள்ளு குடிப்பதற்கு ஒரே இடத்துக்கே செல்லும் பழக்கத்தை கொண்டிருந்ததாகவும் அவ்வாறு செல்லும் போது ஒரு நாள் அந்த இடத்தில் வைத்து பெரியதம்பி அங்கிருந்த ரவி (2 ஆம் எதிரி ரவி என்றழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார்) என்பவரிடம் வித்யாவுடனான தனது ஒருதலை காதல் பற்றி கூறினார் என்றும் அதற்கு எதாவது உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் தம்மால் செய்துதர முடியும் என ரவி என்பவர் பெரியதம்பியிடம் கூறியதாகவும் அதன் பிறகு இரண்டு மூன்று நாள் கழித்து தாங்கள் மாப்பிள்ளை வீட்டில் கள்ளு குடித்துக்கொண்டு இருந்தபோது, அங்கே வந்த ரவியிடம் வித்தியாவை தூக்கி தர சொல்லி பெரியதம்பி கேட்டதாகவும் அப்போது அந்த இடத்தில் தானும் சந்திரஹாசன் மற்றும் தவக்குமார் (3ஆம் மற்றும் 5ஆம் இலக்க சந்தேக நபர்கள் ) ஆகியோர் இருந்தாகவும் வித்தியாவை தூக்கி தாறது என்றால் தனக்கு 20 – 23 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என ரவி பெரியதம்பிக்கு கூறியதாகவும் அதற்கு பெரியம்பி தான் சம்பளம் எடுத்த உடனே பணத்தை தருகிறேன் எனக் கூறியதாகவும் அதன் படி ரவிக்கு பெரியதம்பி வித்தியாவை தூக்கி தர கூறி என பணம் கொடுத்ததாகவும் கூறி தனது சாட்சியத்தை அளித்தார் அதன் பின்னர் சாட்சியின் பாதுகாப்புக் கருதி மூடிய மன்றில் சாட்சியப் பதிவு இடம்பெறவுள்ளதால் செய்தியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை திறந்த மன்றிலிருந்து செல்லுமாறு தீர்ப்பாயம் கேட்டுக் கொண்டது பின்னர் மூடிய மன்றில் சாட்சி சாட்சியமளித்தார். இவரின் சாட்சியை தொடர்ந்து இவ்வழக்கின் 3வது சாட்சியான மாப்பிள்ளை என்றழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியம் கேட்கப்பட்டது இவர் சம்பவத்தின் நிகழ்வுகள் பற்றிய முழு விபரம் அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயம் தொடர்ந்து 2017/06/29 அன்று இடம்பெற்ற 2 ஆம் நாள் தீர்ப்பாயத்தின் 5 ஆம் இலக்க சாட்சியை தொடர்ந்து தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு 3ஆவது சாட்சியான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியப் பதிவு நடைபெற்றது இங்கு சாட்சி கூறிய விடயங்களை வாசகர்களின் தெளிவுக்காக சாட்சியாளர் தானே கூறுவது போலவே வழங்கியுள்ளேன்,
“எனது பெயர் நடராஜா புவனேஸ்வரன் மாப்பிள்ளை என்று சொன்னால் எல்லாருக்கும் தெரியும், நான் கள்ளு சீவுறனான் பெரியதம்பியும் (6ஆம் எதிரி என்றழைக்கப்படும் சிவதேவன் துஷாந்த்), சுரேசும் (உதயசூரியன் சுரேஸ்கரன்) வழமையாக எனது வீட்டுக்கு வந்து கள்ளு வாங்குவார்கள், அவ்வாறே ஒரு நாள் எனது வீட்டுக்கு வந்த பெரிய தம்பி, தான் வித்யாவை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்ய போவதாகவும் என்னிடம் கூறினார்.
சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பும் என்னை வித்தியா பாடசாலைக்குச் செல்லும் வழியால் கூட்டி போனார்கள், ஆலடிச் சந்தியால்தான் வித்தியா வருகிறவா, நான் அவளைக் காதலிக்கிறேன், கல்யாணம் செய்யப்போகிறேன் என்று கூறித்தான் பெரியதம்பி என்னக் கூட்டிக்கொண்டு போனவர் என்னையும் சுரேசையும் ஒளிந்திருந்து பார்க்கச் சொல்லி பெரியதம்பி சொன்னவர் ஜெயக்குமாரும்(2 ஆம் எதிரி ரவி என்றழைக்கப்படும் பூபாலசிங்கம் ஜெயக்குமார்) தவக்குமாரும் (3 ஆம் எதிரி செந்தில் என்றழைக்கப்படும் பூபாலசிங்கம் தவக்குமார்) அந்த இடத்துக்கு வந்தார்கள். அவ அவர்கள் இருவரும் வித்யாவுக்கு அருகில் சென்று அவரை கட்டிபிடித்தார்கள் பாடசாலை வெள்ளை சீருடையுடன் தான் வித்யா வந்தவர்,சப்பாத்து போட்டிருந்தவர், சைக்கிள் கூடைக்குள் குடையிருந்தது, பெரிய தம்பியும் சந்திரகாசனும் ((5 ஆம் எதிரி சந்திரா என்றழைக்கப்படும் தில்லைநாதன் சந்திரகாந்த்) பற்றைக்குள் வித்யாவை இழுத்து கொண்டு சென்றார்கள், பின்பு வித்யா அணிந்திருந்த உடுப்புகள் அனைத்தையும் கழட்டினவர்கள், நான் அங்கால பற்றைக்குள் நின்று பார்த்து கொண்டு நின்றனான் சுரேஷ்கரனும் அவர்களை பார்த்து கொண்டு நின்றவர்.

அப்போது பெரியதம்பி வித்தியாவைப் பார்த்து நான் காதலிப்பது உனக்கு விருப்பமில்லையா? என்று கேட்டார் அந்த நேரம் வித்தியா ஐயோ விடுங்கடா ஐயோ விடுங்கடா என கதறினார், வித்தியாவின் வாயைப் பெரியதம்பி பொத்தினார். உடுப்பைக் கழற்றிய இடத்தில் இருந்து பிள்ளையை வன்புணர்வு செய்த இடத்துக்கு இழுத்துக்கொண்டும், கைத்தாங்கலாகவும் கொண்டு சென்றார்கள்.

வித்தியா கதறி அழுதும் சந்திரகாஸூம் பெரியதம்பியும் அவரை விடவில்லை. அந்த நேரம் ஒரு பாழடைந்த வீட்டுக்குள் வித்தியாவை அவர்கள் கொண்டு சென்றார்கள். செந்தில், ரவி, பெரியதம்பி, சந்திரகாஸ் இவர்கள் நான்கு பேரும்தான் அந்த பாழடைந்த வீட்டுக்குள் சென்றவர்கள், நான் அந்த நேரம் கத்திக்கொண்டு ஓடத் தயாராகினான், பெரியதம்பி கத்தியக்காட்டி நின்று ஆக்கள் யாரும் வருகிறார்களா? எனப் பார்த்துக்கொள் என்றார்.சுரேஸ்கரனும் பற்றைக்குள் நின்றார். அந்த வீட்டுக்குள் வைத்து பிள்ளையை மாறி மாறி ஒளிப்படம் எடுத்தார்கள், பெரியதம்பியும் சந்திரகாஸூம் பிடிக்க ஏனையவர்கள் ஒளிப்படமும் எடுத்தார்கள்.

பெரிய தொடுதிரை அலைபேசி கொண்டுதான் ஒளிப்படம் எடுத்தார்கள் முதலில் வித்தியாவை பெரியதம்பிதான் வன்புணர்வுக்குட்படுத்தினார், இரண்டாவதாக சந்திரகாஸூம் மூன்றாவதாக செந்திலும் இறுதியாக சந்திரகாஸ் ஒளிப்படம் எடுக்க ஜெயக்குமார் வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தினார்.பின்புதான் அந்தப்பிள்ளை மயங்கி விட்டது ஒளிப்படம் எடுத்து சுவிஸ்குமாருக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வெளிநாட்டுக்கு கொண்டு போகப் போறார் என்றும் அவர்கள் கதைத்துக்கொண்டனர்.சிறிது நேரத்துக்கு பிறகு கைத்தாங்கலாக பிள்ளையை தூக்கிக்கொண்டு வந்து அலரி மரத்தில் கட்டினார்கள் கூப்பிடு தூரத்தில்தான் நான் நின்றேன் பிள்ளையின் வெள்ளைச் சீரூடையின் சட்டையின் இடுப்புப்பட்டியால் கைகள் இரண்டையும் கழுத்துப்பக்கமாக வளைத்துக் கட்டினார்கள். பின்பு கால்களை விரித்து சப்பாத்து நூல்களினால் அலரி மரத்து கிளைகளுடன் கட்டினார்கள். பின்பு பிள்ளையின் ஆடைகளை அவரது உடம்பின் மேல் போட்டார்கள்.

பிறகு நான் சீவலுக்கு போறதுக்காக வீட்ட போய்விட்டேன். பின்னர் அதே நாள் காலை 9.30 மணிக்கு அந்த நான்கு பேரும் கள்ளுக்குடிப்பதற்காக என்ர வீட்டுக்கு வந்தார்கள். பின்னேரமும் வந்தார்கள். நான் மழை என்றதால் கள்ளு சீவவில்லை சந்திரகாசன், பெரியதம்பியும் வந்தார்கள் கள் சீவவில்லை என்றதும் திரும்பிச் சென்றுவிட்டார்கள் சிறிது நாட்கள் கழித்து என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டினார்கள் நான் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இது பற்றி வாக்குமூலம் அளித்தேன்.சுவிஸ்குமாரை எனக்கு அறிமுகப்படுத்தியது சுரேஸ்கரன்தான். சுவிஸ்குமாரின் மனைவியின் தம்பிதான் பெரியதம்பி. சுவிஸ்குமார் வெளிநாட்டுக்கு கொண்டு போறதுக்குத்தான் வீடியோ எடுத்ததாகப் பெரியதம்பி கூறினார்.” என்று கூறி தனது சாட்சியத்தை நிறைவு செய்தார். அதனை தொடர்ந்து எதிரிக்கூண்டில் நிற்கின்ற 6ஆவது இலக்க எதிரிதான் பெரியதம்பி என்று கூறப்படும் துசாந்தன், 5ஆம் எதிரி சந்திரகாஸ்,3ஆம் எதிரி தவக்குமார், 2ஆம் எதிரி ஜெயக்குமார், 9ஆம் எதிரி சுவிஸ்குமார், 4ஆம் எதிரி சசி,7ஆம் எதிரி நிசாந்தன், 8ஆம் எதிரி கண்ணன் என எதிரிகளை ஒவ்வொருவராக சாட்சி அடையாளம் காட்டினார், சைக்கிளுடைய கூடையையும் சீற்றையும் வைத்து இது வித்தியாவினுடைய சைக்கிள்தான் என அடையாளம் காட்டினார். மேலும் அவரது சாட்சியத்துடன் இரண்டாம் நாள் தீர்ப்பாய பதிவுகளும் நிறைவடைந்தன. 3ஆம் நாள் தீர்ப்பாயத்தில் இடம்பெற்ற சாட்சிய பதிவில் இவ்வழக்கின் பிரதான சூத்திர தாரியான சுவிஸ் குமார் பற்றிய பல விடயங்கள் அம்பலமாகின அதை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

டயஸ் சர்மிலன், சட்ட பீடம்,கொழும்பு பல்கலைகழகம்.

இந்த தொகுப்பானது செய்தி வலைதளங்களில் இருந்தும் தினசரி பத்திரிக்கைகளிலிருந்தும் பெறப்பட்டு தொகுக்கப்பட்ட ஒன்றாகும்.

Leave a Reply

error: Content is protected !!