Home > Slider > லிந்துல்ல மட்டக்கலையில் மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது (படங்கள்)

லிந்துல்ல மட்டக்கலையில் மரக்கறி தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது (படங்கள்)

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்கலை தோட்டத்தில் மரக்கறி தோட்டத்தில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று தோண்டி எடுக்கப்பட்டது.

குறித்த தோட்டத்தில் 23வயதுடைய திருமணமாகிய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வைத்து சிசு ஒன்றை ஈன்றேடுத்துள்ளார் குறித்த சிசுவை தாயும், முதாட்டி ஒருவரும் தாயின் மாமியாரும் சோந்து சிசுவவை கொலை செய்து மரக்கறி தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் புதைத்தாகவும் பின்னர் சிசுவை பெற்ற தாயாருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டப்பின்னர் மேற்படி பெண் குழந்தை பெற்ற விடயம் தெரியவந்துள்ளது.

5902

வைத்தியசாலை நிர்வாகம் இந்த விடயம் தொடர்பில் லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்த பின்னர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணைகளின் பின்னர் மேற்படி பெண்ணின் தாயாரையும் அவரது மாமியாரையும் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியபோது விடயம் அம்பலத்துக்கு வந்தது.

புதைக்கப்பட்ட சிசுவை நுவரெலியா மாவட்ட நீதிமன்ற பதில் நீதிவான் நாணயக்கார முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

சுகவீனமுற்ற தாயார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு அவரது தாயாரும் மாமியாரும் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்-
சுஜீவன்.

Leave a Reply

error: Content is protected !!