Home > பிரதான செய்திகள் > அம்புளுவாவை மலையில் மண்சரிவு!

அம்புளுவாவை மலையில் மண்சரிவு!

மாவனல்லை அருகே அம்புளுவாவை மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லை அம்புளுவாவை மலையின் கீழ்ப்பகுதியான அம்பலவ பிரதேசத்தில் நேற்று(11) மாலை 4.00 மணியளவில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில் அப்பகுதி ஆபத்தான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பிரதேசத்தில் அரசாங்கத்தின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நன்னீர் மீன்வளர்ப்பு நிலையம் முற்றாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.

அத்துடன் மலையில் இருந்து உருண்டு வந்த பாரிய கற்பாறைகள் காரணமாக மாவனல்லை மற்றும் ஹெம்மாதகமை பிரதேசத்தின் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்ட பிரதேசத்தில் வசித்த மூன்று குடும்பங்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட்டதுடன், பிரதேசம் முழுவதும் அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!