Home > Slider > இளைஞர்கள் உடல் உளத்தை உறுதிசெய்ய விளையாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்- ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

இளைஞர்கள் உடல் உளத்தை உறுதிசெய்ய விளையாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்- ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

இளைஞர்கள் உடல் உளத்தை உறுதிசெய்ய விளையாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஸ்ரீதரன் தெரிவிப்பு.

நவீன தொலைத் தொடர்பு சாதனங்களைத் தமது பொழுது போக்குக்காக அதிகமாக பயன் படுத்துகின்ற இளைஞர்கள் தமது உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்கின்ற விளையாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

டிக்கோயா வனராஜா மேற்பிரிவு பட்டர்பிளை விளையாட்டுக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்துப் பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் டிக்கோயா அமைப்பாளர் உ.சுப்பிரமணியம் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வின் போது மத்திய மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரன் பட்டர்பிளை விளையாட்டுக்கழத்துக்கு முதற்பரிசுக்கான பணத்தொகையை வழங்கினார்.

இதன் போது ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

தற்கால இளைஞர்கள் கைத்தொலைப்பேசியின் ஊடாக பேஸ்புக் , வட்சப் போன்ற சமூக ஊடகங்களில் தமது நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனர். இந்த ஊடகங்களின் மூலமாக கிடைக்கின்ற நன்மைகளுக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

அதே நேரம் மனிதனுக்கு உடற்பயிற்சி என்பது முக்கியமானதாகும்.இந்தப்பயிற்சியை விளையாட்டுக்களின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே கிரிக்கெட் , கரப்பந்தாட்டம் , காற்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். தோட்டப்பகுதிகளில் இயங்குகின்ற விளையாட்டுக்கழகங்கள் இவ்விடயம் தொடர்பில் இளைஞர்களை ஒன்றிணைப்பதற்கு முனைப்புடன் செயற்படுகின்ற பட்சத்தில் எனது உதவி நிச்சயமாக கிடைக்கும்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Leave a Reply

error: Content is protected !!