Home > Slider > நான் வளர்த்த மரங்கள் எனக்கே சொந்தம்; வட்டக்கொடையில் முதியவர் மரத்தில் கூடாரம் அமைத்து போராட்டம்!

நான் வளர்த்த மரங்கள் எனக்கே சொந்தம்; வட்டக்கொடையில் முதியவர் மரத்தில் கூடாரம் அமைத்து போராட்டம்!

நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு எனக்கே அதிகாரம் உண்டு இதை தடுக்க யாருக்கும் உரிமையில்லை எனது குடும்ப நிலைமை படு மோசமாக உள்ளது ஐந்து பிள்ளைகளின் கல்வி மற்றும் குடும்ப செலவு என்பன மேலோங்கியுள்ளது எனவே நான் வளர்த்த மரங்களை வெட்டுவதற்கு அரசாங்கத்திற்கு இடமளியேன் என கூறி, வட்டகொடை மடக்கும்புர வேவஹென்ன கிராமத்தின் எம்.ஜி.பந்தல பண்டார என்பவர் மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

21728093_505424469809425_6171457749364333568_n

தனக்கு சொந்தமான காணியில் வளர்க்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுவதற்கு தாம் அனுமதிகளை பெற்றிருந்த வேளையில் அதனை அரச சொத்தாக அபகரிக்க திட்டம் தீட்டுகின்றார்கள்.
இதற்கென 2016.10.18ம் திகதி அரசாங்க செயலக பிரிவில் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. அனுமதியை பெறுவதற்காக பனிரென்டாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் ரூபா வரையிலான தொகையும் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

இருந்தும் எனக்கு சொந்தமான மரங்களை என்னால் வெட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளேன். ஆகையால் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றேன்.

நான் வளர்த்த மரங்கள் உபயோகத்திற்காக வெட்டும் தருவாயில் உள்ளது. இதனை எனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும் என கோரி 13.09.2017 அன்று மரத்தில் கூடாரம் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!