Home > Slider > லக்ஷபான மின்சார நிலைய ஊழியர்கள் 450பேர் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்!

லக்ஷபான மின்சார நிலைய ஊழியர்கள் 450பேர் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்!

லக்ஷபான மின்சாரசபையின் கீழ் இயங்கும் 5 மின்சார நிலைய ஊழியர்கள் 13.09.2017 நன்பகல் முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்னர்.

லக்ஷபான மின்சாரசபைக்குற்பட்ட கெனீய, மவுசாகலை,விமலசுரேந்திர மற்றும் காசல்ரீ மின்சார சபை ஊழியர்கள் 450 பேர் வரையில் மேற்படி பனிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
DSC00119DSC00122-1DSC00129

நுகர்வோர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து மின்சார சேவை சங்கத்தினரால் நண்பகல் முதல் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பு போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பபட்டு வருகின்றது.

இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லக்ஷபான மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதே வேலை அட்டன் மின்சார சேவை நிலைய ஊழியர்கள் ஒருசிலரும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் போராட்டத்தில் மின்சார சபை பொறியியலாளர்கள், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் என பலரும் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Leave a Reply

error: Content is protected !!