Home > உலகம் > 5 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா!!

5 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா!!

மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா உடல்நலம் பாதித்த தனது கணவர் நடராஜனை பார்க்க 15 நாள் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்நிலையில் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு சசிகலா இன்று வெளியே வந்தார். சென்னை வரும் அவர் தியாகராயநகரில் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் தங்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவிற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்..

* வீட்டில் இருந்து மருத்துவமனை, மருத்துவமனையில் இருந்து வீடு, தவிர வேறு இடங்களுக்கு செல்லக்கூடாது

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மருத்துவமனையில் இருக்க, சசிகலாவுக்கு அனுமதி

* நள்ளிரவில் மிக அவசியமான சூழல் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தந்துவிட்டு செல்லலாம்

* ஊடகங்களை சந்தித்து எந்த கருத்துக்களையும், சசிகலா தெரிவிக்கக்கூடாது என்றும் நிபந்தனை

* பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில், சசிகலா பங்கேற்கக்கூடாது

* சசிகலா தாமாகவே, எந்த அரசியல்வாதியையும் அழைத்து சந்திக்கக்கூடாது, வீட்டுக்கு வருபவர்களை சந்திக்க தடையில்லை.

Leave a Reply

error: Content is protected !!