Home > Slider > மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் பேரணி!!

மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் பேரணி!!

மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவையில் பேரணி.

பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் இணைந்து மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விழுப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வு 06.12.2017.புதன் கிழமை காலை 11மணி அளவில் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.சி.தர்மபிரிய தலைமையில் இடம் பெற்றது.

IMG-6eb554f227779293cb021b28786cd42a-V IMG-09fedf592951ecceaf6cad98f8002892-V IMG-6f9e87df580c0057701d51244af8daad-V

இந்த பேரணியானது பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஆரம்பிக்கபட்டு பொகவந்தலாவ செல்வகந்தை சந்தி வரை சென்று மீண்டும் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்கு சென்றது.

இந்த பேரணியில் பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்தியகல்லூரி ஹொலிரோஸ்சரி தமிழ் வித்தியாலயம் தர்மகிர்த்தி மத்திய மகாவித்தியாலயம் போன்ற பாடசாலை மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டதோடு அட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன்பெரேரா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

Leave a Reply

error: Content is protected !!