Home > Slider > உயர்தர தமிழ் பாடத்திட்டத்தில் மலையகத் தமிழ் இலக்கியம் புறக்கணிப்பு!!

உயர்தர தமிழ் பாடத்திட்டத்தில் மலையகத் தமிழ் இலக்கியம் புறக்கணிப்பு!!

உயர்தர தமிழ் பாடத்திட்டத்தில் மலையகத் தமிழ் இலக்கியம் புறக்கணிப்பு : ஸ்ரீதரன் மாகாணசபையில் எடுத்துரைப்புக.பொ.த உயர்தர தமிழ் பாடத்திட்டத்தில் மலையகம் தமிழ் மக்கள் சார்ந்த இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டமையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மத்திய மாகாண விவசாய , தமிழ்க்கல்வியமைச்சின் 2018 ஆம் வருடத்துக்கான வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு பேசுகையில் கூறியதாவது :
1997 ஆம் ஆண்டிலிருந்து உயரதரம் தமிழ் பாடத்திட்டத்தில் மலையகத் தமிழ் மக்கள் சார்ந்த இலக்கியங்கள் இடம் பெற்று வந்துள்ளன. எனினும் 2017 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடத்திட்டத்தில் மலையகத் தமிழ் மக்கள் சார்ந்த இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

1997 ஆம் ஆண்டு உயர்தரம் தமிழ் பாடத்திட்டத்தில் மக்கள் கவிமணி சிவி வேலுபிள்ளையின் தேயிலைத் தோட்டத்திலே என்ற கவிதையும் 2007 ஆம் ஆண்டு முதல் அமுல் படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில் கவிஞர் குறிஞ்சித் தென்னவனின் சம்பள நாள் என்ற கவிதையும் என்.எஸ்.எம்.ராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து என்ற சிறுகதையும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

எனினும் இவ்வருடம் முதல் அமுல் படுத்தப்படுகின்ற பாடத்திட்டத்தில் மலையகத் தமிழ் மக்கள் சார்ந்த எவ்வித இலக்கியமும் உள்ளடக்கப்படவில்லை.. எனவே இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாணசபையின் ஊடாக கல்வியமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

16300357_1174052996023401_4769709086948161325_o

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Leave a Reply

error: Content is protected !!