Home > Slider > நுவரெலியாவில் தனித்துப் போட்டியிட இ.தொ.க. தீர்மானம்!!

நுவரெலியாவில் தனித்துப் போட்டியிட இ.தொ.க. தீர்மானம்!!

நுவரெலியா, அம்பேகமுவ பிரதேச சபைகளில் ஆறு தொகுதிகளில் ஐந்தில் தனித்துப் போட்டியிட இ.தொ.க. தீர்மானம்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு களமிறங்குவது என்பது தொடர்பான தமது தீர்மானத்தை பெரும்பாலான கட்சிகள் அறிவித்துள்ளன.

தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் நிலைப்பாடு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியது.

சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் குறிப்பிட்டார்.
நுவரெலியா பிரதேச சபையிலும் அம்பேகமுவ பிரதேச சபையிலும் பிரிக்கப்பட்டுள்ள ஆறு தொகுதிகளில் ஐந்தில் தமது கட்சி தனித்துப் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொத்மலை, வலப்பனையில் சேர்ந்து போட்டியிடவும் பன்விலயில் தனித்துப் போட்டியிடவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!