Home > Slider > 2016 ஆம் ஆண்டு சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் 5பேர் இன்று கைது – நோர்வூடில் சம்பவம்!!

2016 ஆம் ஆண்டு சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் 5பேர் இன்று கைது – நோர்வூடில் சம்பவம்!!

கடந்த கூட்டு ஒப்பந்த காலத்தில் பொகவந்தலாவ அட்டன் பிரதான வீதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிளார்கள் 5 பேரை இன்று நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரி கடந்த கூட்டு ஒப்பந்த காலத்தில் மலையகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு முன்னெடுத்திருந்தனர்.

இப்போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் மலையகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பொகவந்தாலவை அட்டன் பிரதான வீதியை மறைத்து சுமார் 3 மணித்தியாலங்கள் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன் டிலரி மக்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

இப்போராட்டம் கடந்த 2016 ஆண்டு இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் இப்போராட்டம் நடைபெற்று ஓராண்டு கடந்த நிலையில் இன்று 07.12.2017 வியாழக்கிழமை குறித்த போரட்டத்தை ஏற்பாடு செய்திருந்த 5 தோட்ட தொழிலாளர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 5 தோட்ட தொழிலாளர்களையும் அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஓராண்டு கடந்து தற்போது கைது செய்யப்படுவது நோர்வூட் பொலிஸார் பலிவாங்கள் நடவடிக்கை என சென்ஜோன் டிலரி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை நிருபர் சதிஸ்

Leave a Reply

error: Content is protected !!