முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

Govinthan

கூட்டு ஒப்பந்த தொழிற்சங்களுக்கு முடியாவிட்டால் அரசுடன் நாம் பேச்சுக்களை மேற்கொள்வோம்; பொகவந்தலாவையில் மனோ!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாரக இருப்பதாக தேசிய ஒருமைபாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகனேசன் தெரிவித்தார். 14.10.2018 அன்று ஞாயிற்றுகிழமை பொகவந்தலாவ சென்.மேரீஸ் மத்திய கல்லூரியில் அமைச்சின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இலவச நடமாடும் சேவையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து...
Read More

முதலாளிமார் முன்வைத்துள்ள சம்பள யோசனைக்கு தொழிற்சங்கங்கள் மயங்கிவிடக்கூடாது; இ .தம்பையா!

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் இம்முறை 25 ரூபாவால் உயர்த்துவதற்கு முதலாளிமார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுக்கு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அடிப்படை சம்பளமாக 575 ரூபாவும், மேலதிக கொடுப்பனவுகளுமாக இணைத்து 936 ரூபாவை வழங்க முதலாளிமார் சம்மேளனம் வழங்க முன்வந்துள்ளமைக்கு கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தொழிற்சங்கங்கள் மயங்கிவிடக் கூடாது என சட்டதரணி இ.தம்பையா தெரிவித்தார். பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வழியுறுத்தும் மக்கள் மாநாடு 13.10.2018 அன்று அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு...
Read More

மலையக மக்களின் குடியுரிமை பறிப்புக்கு எதிராக உரத்து குரல் எழுப்பியவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மோத்தா!

1931 ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமையின் கீழ் இலங்கை வாக்குரிமை பெற்ற இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களின் வாக்குரிமையை 1948 ஆண்டு சுதேச அரசாங்கம் பறிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றிய போது, அப்போது எமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த ஏழு பேரில் ஒருவரான ஜோர்ஜ் ஆர் மோத்தா அதற்கு எதிராக உரத்து குரல் எழுப்பியவராவார். அவரின் நினைவாகவே கோர்டலோஜ் போர்ட்சூட் தோட்டத்தில் அமைக்கப்படும் புதிய கிராமத்துக்கு “ மோத்தாபுரம்” என பெயரிட்டு கௌரவம்...
Read More

நில தாழிறக்கம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய இடத்தில வீடுகள், அமைச்சர் திகா உறுதி!

நோர்வூட் நிவ்வெளிகம பிரதேசத்தில் நிலத்திழிறக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு புதிய இடத்தில் தனி வீடுகளை அமைத்து தருவதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாயஅபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார் . நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்டுள்ள நிழத்தாழிறக்க பகுதிகளை 13.10.2018 நேரில் சென்று பார்வையிட்ட போதே இவ்வாறு தெரிவித்தார் கடந்த வாரம் பெய்த மழையினால் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் நிலம் வெடிப்புகள் ஏற்பட்ட நிலையில் 6 குடும்பங்ஙளை சேர்ந்த 23 பேர் வெளியேற்பட்டனர் அதே...
Read More

சம்பள கோரிக்கை வலுப்பெறுகிறது; கொட்டகலையிலும் ஆர்ப்பாட்டம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் 13.10.2018 அன்று மாலை கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலம் நடத்தினர். உரிய முறையில் முதலாளிமார் சம்மேளனத்துடன், தொழிற்சங்கங்கள் பேச்சுவாரத்தை நடத்தி பண்டிகை காலத்திற்கு முன்பதாக தோட்ட தொழிலாளர்களுக்கு இம்முறை நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டுமெனவும், எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று தரவேண்டுமெனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட...
Read More

ஐந்து பசுக்கள் மற்றும் இரண்டு கன்றுகளுடன் சென்ற லொறி அட்டனில் பொலிஸாரால் தடுத்து வைப்பு!

ஜந்து பசுமாடுகள் மற்றும் இரண்டு கன்று குட்டிகளுடன் இரண்டு சந்தேக நபரை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் நோர்வூட் பகுதியில் இருந்து வவூனியா பகுதிக்கு லொறிவண்டி ஒன்றில் முறையான அனுமதி பத்திரங்கள் இன்றி கொண்டு சென்ற போதே 11.10.2018.வியாழகிழமை இரவு 09மணி அளவில் அட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். ஜமில் தெரிவித்தார் அட்டன் தலைமையக பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கு அமைய மேற்கொள்ளபட்ட...
Read More

ஐந்து நாள் பதில் முதலமைச்சர் பதவியில் இருந்தபோது; 422 பேருக்கு நிரந்திர நியமனங்களை வழங்கினேன் ரமேஷ் பெருமிதம்!

எனக்கு பதில் முதலமைச்சர் பதவி கிடைத்தவுடன் முக நூலில் பல்வேறு விதமான வாதங்களை முன்வைத்திருந்தனர். ஒரு சிலர் பதில் முதலமைச்சர் பதவியினை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார் என கேள்வி எழுப்பி இருந்தனர். எனக்கு அமைச்சுப்பதவிகள் கிடைக்கும் போதெல்லாம் அதனை சரியாக பயன்படுத்தி நுவரெலியா, மாத்தளை, கண்டி ஆகிய மூன்று மாவட்டங்ளுக்கு பல்வேறு வேலைகளை செய்திருக்கின்றேன். இன்று பதில் முதலமைச்சராக கிடைத்த பதவியினை கொண்டு 422 பேருக்கு விவசாய அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுத்திருக்கிறேன் என...
Read More

அகில இலங்கை சமாதான நீதவானாக மோறார் தோட்டத்தை சேர்ந்த மாதவன் கண்ணதாசன் நியமனம்!

அகில இலங்கை சமாதான நீதவானாக பொகவந்தலாவை, மோறார் தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மாதவன் கண்ணதாசன் அண்மையில் வலப்பனை நீதவான் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அம்பகமுவ பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராக பணியாற்றி வரும் இவர் தனது ஆரம்பக் கல்வியை பொகவந்தலாவ தெரேசியா தமிழ் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை சென் மேரிஸ் மத்திய கல்லூரியிலும், கல்வி பயின்று பின்னர் தனது பட்டப்படிப்பை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் முடித்துக் கொண்ட இளம் பட்டதாரியான கண்ணதாசன் சமூக மேம்பாட்டிற்கான ஆக்கபூர்வமான...
Read More

கால்நடைகளை வைத்து ; மகன் இந்தியாவில் ஜல்லிக்கட்டு, தந்தை இலங்கையில் சல்லிக்கட்டு திலகர் சாடல்!

தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சு பதவிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கான அதிகார சபையை கொண்டுவந்துள்ளது. ஆனால் ஆண்டாண்டு காலமாக அமைச்சுப்பதவியை வைத்திருந்தவர்கள் கால்நடை அமைச்சையும் கால்நடை அபிவிருத்தி சபையையுமே வைத்திருந்தனர். இன்று கால்நடை அபிவித்தி சபை தலைவருக்கு என்ன நடந்துள்ளது என எல்லோருக்கும் தெரியும். ஊவா மாகாண அமைச்சர் செந்தில் ஜல்லிக்கட்டு விளையாடுகிறார்.அவரது தந்தையார் முத்துவிநாயகம் இங் கே சல்லிக்கட்டோடு விளையாடுகிறார். இரண்டு விளையாட்டுகளுமே கால்நடைகளை வைத்துக்கொண்டுதான் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட...
Read More

பாக்கியபுரம் கோட்லோஜ் தோட்டத்தில் திறந்து வைப்பு!

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 240 இலட்ச ரூபா செலவில் நுவரெலியா கோட்லோஜ் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 24 தனி வீடுகளைக் கொண்ட “பாக்கியம் புரம்” கிராமத்தின் திறப்பு விழா 07.10.2018 அன்று இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவர், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன்,...
Read More
1 2 3 569
error: Content is protected !!