முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

பதுளை – வெலிமடை வீதியில் மண்சரிவு அபாயம் -சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பதுளை – வெலிமடை வீதியின் மொரேதொட்ட பகுதியில், மண்சரிவு அபாயம் நீடித்து வருவதால், மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு, வாகன சாரதிகளுக்கு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் பரவும் “லிஸ்மானியஸ்“ தோல் நோய்- மக்களே அவதானம்

மத்திய மாகாணத்தில் சிறிய வகை ஈக்களினால் தோல் நோயொன்று பரவுவதாகவும், இதனால் ஏற்படும் புண் நீண்ட நாள்களுக்கு குணமாகாமல் இருக்குமாயின், தகுந்த வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சைப் பெறுமாறும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகிய 18 வயது பாடசாலை மாணவன் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலை ஜெயந்தி மாவத்தைப் பகுதியில், மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி, 18 வயது பாடசாலை மாணவரொருவர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தலவாக்கலையில் இருந்து நாவலபிட்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி விபத்து- இருவர் வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலையில் இருந்து நாவலபிட்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

1,000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி பதுளையில் கறுப்புச்சட்டை ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு, 1,000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி, இன்று பதுளையில் கறுப்புச்சட்டை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலக முடிவிலிருந்து தவறி வீழ்ந்த ஜேர்மன் நாட்டு பெண்ணை தேடும் நடவடிக்கை தீவிரம்

அம்பேவளை – பட்டிப்பொல உலக முடிவிலிருந்து தவறி வீழ்ந்த ஜேர்மன் நாட்டு பெண் ஒருவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

15ம் திகதிக்கு பிறகு மீண்டும் நான் அமைச்சராக வருவேன் – அட்டனில் திகாம்பரம் தெரிவிப்பு

மலையக மக்களுடைய வாக்குகளை பெற்று பராளுமன்றம் சென்று அமைச்சர் பதவியையும் பெற்று மக்களுக்காக சேவை செய்த நான் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக புதிய அமைச்சராக மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் பெற்றுள்ளார்கள்.

இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக மலையக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று நேற்று அட்டன் டி.கே.ட.பிள்யு மண்டபத்தில் நடைபெற்றது…..

கூட்டத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணியின் பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம் கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ் அரவிந்தகுமார் அதேபோல கூட்டணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் நகர சபை உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் மலையகத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக  ஒன்றிணைந்து கொண்டவர்கள் அனைவரும்...
Read More

மகிந்த ராஜபக்சவிற்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருந்தால் அன்றும் நாங்கள் அவருடனேயே இணைந்திருப்போம் – இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

மகிந்த ராஜபக்சவிற்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருந்தால் அன்றும் நாங்கள் அவருடனேயே இணைந்திருப்போம் அதற்கு காரணம் இது கட்சி பேதங்களுக்கு அப்பால் பட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு செயல்பாடாகும் எனவே இதில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக என்பதைவிட சிறுபான்மை மக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கின்றோம் என நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவருமான கலாநிதி...
Read More
1 2 3 185
error: Content is protected !!