முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

நுவரெலியா சீதா கோயிலை புனர்நிர்மானம் செய்ய இந்தியா 5 கோடி ரூபா நிதியுதவி…

இலங்கையில் உள்ள சீதா கோயிலை புதுப்பிக்க மத்திய பிரதேச அரசு ரூ.5 கோடி நிதி வழங்கவுள்ளது.மேலும், இந்த கோயில் சீரமைப்பு பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது . மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் சமீபத்தில் இலங்கை சென்றனர்.இவர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துப் பேசினர்.இந்தச் சந்திப்பில் சீதை சிறைப்பிடித்து இலங்கையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த நுவரெலியா பகுதியில் சீதா கோயில் உள்ளது.இந்தக் கோயிலை மேம்படுத்த மத்திய பிரதேச...
Read More

டயகமவில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு!!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம, வேவர்லி தோட்டம் ஆட்லி பிரிவில் 18.01.2020 அன்று மாலை 4.30 மணியளவில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று டயகம பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது.

கொட்டகலை குடா ஓயா ஆர்கலி கிராம உள்ளகப் பாதை திறப்பு

கம்பெரலிய கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொட்டகலை குடா ஓயா பகுதியில் ஆர்கலி கிராம உள்ளகப் பாதை இரண்டு மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

அனுசியா சந்திரசேகரன் பாராளுமன்றத்திற்கு ஆசைப்பட்டு மலையக மக்கள் முன்னணியினை சிதைத்து விடக் கூடாது- புஸ்பா விஸ்வநாதன் கோரிக்கை.

மலையக மக்கள் முன்னணியில் பிரதி செயலாளராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கும் அனுசியா சந்திரசேகரன். இன்று கட்சில் எவ்வித ஆலோசனைகளும் இன்றி, தான.; பாராளுமன்ற தேர்லில் போட்டியிடப்போவதாக அறிவித்து வருகிறார். கட்சியின் ஸ்தாபகர் சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளர் என்ற வகையிலும்,அவரை இப்பதவிகளுக்கு கொண்டு வருவதற்கு நெருங்கிய தொடர்பட்டவன். என்ற வகையிலும், அவர் பாராளுமன்றத்திற்கு ஆசைப்பட்டு மலையக மக்கள் முன்னணியினை சிதைத்து விட கூடாது. என கோரிக்கை விடுப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தொழிலாளர் முன்னணியின் நிதிச்செயலாளர் கவுன்சில் உறுப்பினருமாகிய...
Read More

மலையக கால்நடை வளர்பாளர்கள் பட்டிப்பொங்கலினை உணர்வு பூர்வமாக கொண்டாடினர்!!

மலையகத்தில் உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று (16) மாட்டுப்பொங்கல் அல்லது பட்டிப்பொங்கல் என்று அழைக்கப்படும் பொங்கலினை அவற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குடும்பத்துடன் இணைந்து மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடினர்.

டிக்கோயா வனராஜா பகுதியில் பாரிய தீ

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள மானா தோப்பிற்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீயினால் பெருமளவிலான மானா எறிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தரம் 01க்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு-

தரம் 01 க்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நாடளாவிய ரீதியில் 16.01.2020வியாழகிழமை இடம் பெற்றது அந்தவகையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல02 தமிழ் வித்தியாலயத்திலும் தரம்01மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு இன்றைய தினம் வித்தியாலயத்தின் அதிபர் என். அருளாநந்தம் தலைமையில் இடம் பெற்றது

மத்திய மாகாண தமிழ் மாணவர்கள் தரம் 01 உள்வாங்கும் நிகழ்வு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் மிக சிறப்பாக நடைபெற்றது!!

தரம் 01 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு நாடுகெங்லும் இன்று (16) திகதி முன்னெடுக்கப்பட்டன. தேசிய நிகழ்வு மாத்தளையில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 16.01.2020 அன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்கிறார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு ஒன்று கிடைக்கும் என கூறி வந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்போவதாக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
1 2 3 365
error: Content is protected !!