முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பது தொடர்பில் மறுபரிசீலினை செய்ய வேண்டும்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சில ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடுகள் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பது தொடர்பில் மறுபரிசீலினை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மவுசாகலை நீர்தேக்கத்தில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது – இயந்திரங்கள் மீட்பு!!

மஸ்கெலியா மவுசாகலை நீர் தேக்கத்தில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூவரை மஸ்கெலிய அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்…

மலையக மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வெற்றி பெற்ற 18 உறுப்பினர்கள் 21.03.2018 அன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

பெற்றோசோ டெவன் போல் தோட்ட விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!

மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐந்து இலட்ச்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டில் பொகவந்தலாவ பெற்றோசோ டெவன் போல் தோட்ட விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவ மாவட்ட அமைப்பாளர் கலியான குமார் அவர்களினால் ஆரம்பித்து வைக்கபட்டது. இதன் இடம் பெற்ற விஷேட பூஜைகளையும் பெக்கோ இயந்திரத்தை கொண்டு பணிகள் ஆரம்பிக்கப்படுவதையும் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். பொகவந்தலாவ...
Read More

கெனியன் நீர்தேகத்தில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவனை மீட்க சுழியோடிகள் வருகை!!

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் காணப்படும் கெனியன் மின்சார சபைக்கு நீர் வழங்கும் நீர்தேகத்தில் தவறி விழுந்து உயிரிழந்த ஹப்புகஸ்தென்ன கீழ் பிரிவு தோட்ட மாணவனை மீட்க கொழும்பிலிருந்து சுழியோடிகள் 21.03.2018 அன்று வருகை தரவுள்ளனர்.

பண்டாரவளையில் கஞ்சா செடி தோட்டம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது!!

பண்டாரவளை  கொஸ்லந்த உனகந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடி தோட்டம் ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தா தேசிய பாடசாலைக்கு 1000 குப்பைதொட்டிகள் வழங்கும் நிகழ்வு!!

மேல் மாகாண சபை உறுப்பினர் கே. ரீ. குருசாமி அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட நிதியினால் விவேகானந்தா தேசிய பாடசாலைக்கு 1000 குப்பைதொட்டிகள் வழங்கும் நிகழ்வு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நல்லத்தண்ணி ஆரம்ப பிரிவு பாடசாலையின் உப அதிபரை இடமாற்றம் செய்ய கோரி ஆர்பாட்டம்!!

நல்லத்தண்ணி ஆரம்ப பிரிவு பாடசாலையின் உப அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
error: Content is protected !!