முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

1ம் தர வரவேற்பு நிகழ்வு குயின்ஸ்பெரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கோலாகமாக இடம்பெற்றது!!

  இன்றைய தினம் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான அனுமதி வழங்கும் நிகழ்வு பல பாடசாலைகளில் இடம்பெற்றது.அந்தவரிசையில் கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையான குயின்ஸ்பெரி தமிழ் மகா வித்தியாலயத்தில் முதலாம் தர மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மாணவர்கள் 80 பேர் வைத்தியசாலையில்…

எல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட எல்ல – பல்லேகெட்டுவ சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 80 பேர் 17.01.2019 அன்று குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 01க்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு- பொகவந்தலாவ

நுவரெலியா மாவட்டம் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல.02தமிழ் வித்தியாளயத்தில் தரம் 01க்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு 17.01.2019 வியாழகிழமை வித்தியாலயத்தின் அதிபர் ஏ.அருளாநந்தம் தலைமையில் இடம் பெற்றது.

தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவம்

2019 ஆம் கல்வி ஆண்டுக்காக தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் நிகழ்வு கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக 17.01.2019 அன்று நாடாளவீய ரீதியில் நடைபெற்றது.

தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவல்!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் 17.01.2019 அன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 2 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்வரும் தினங்களில் ஆயிரம் ரூபா அடிப்படை நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடரவுள்ளதாக ஒருமீ அமைப்பு தெரிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களை எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ள உள்ளதாக சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மும்மத மக்களும் இணைந்து அட்டனில் பொங்கல் கொண்டாட்டம்!!

அட்டன் சக்தி மண்டபம் முன்னால் மும்மத மக்களும் இணைந்து 15.01.2019.செவ்வாய்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்த நகிழ்வானது அட்டன் வர்த்தகர்ளால் ஏற்பாடு செய்யபட்டிருந்தமைகுறிப்பிடதக்கது. இதன் போது பொங்கல் விழாவிற்க்கு சமூகம் அளித்து இருந்த மும்மதத்தைச் சார்ந்த மக்களுக்கும் பால் கடலை பொங்கல் என்பன சமைத்து பகிர்த்தளிக்கபட்டது இதேவேலை பொங்கல் பொங்கி சூரியபகவானுக்கு மும்மதத்தை சார்ந்த மக்கள் நன்றியினை தெரிவித்தமையும் குறிப்பிடதக்கது.   (பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

10அடி நீளம் கொண்ட மலைபாம்பு பொகவந்தலாவையில் பிடிக்கபட்டது!!

பொகவந்தலாவ கிலானி தோட்டத்திற்க்கு செல்லும் பிரதான வீதியில் பத்து அடி நீளம் கொண்ட பாரிய மலை பாம்பு ஒன்று விஷேட அதிரடி படையினரால் 14.01.2019 திங்கள் கிழமை இரவு 11.30மணி அளவில் பிடிக்கபட்டுள்ளதாக விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்
error: Content is protected !!