முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

ஷில்பக் என்.எம்புலே புதிய உதவி உயர்ஸ்தாணிகராக இலங்கைக்கு வருகை….

இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தாணிகர் அரிந்தம் பக்ஷி அவர்கள் விடைபெற்று செல்வதோடு ஷில்பக் என்.எம்புலே புதிய உதவி உயர்ஸ்தாணிகராக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

புலி இனத்தை சேர்ந்த உயிரினம் சுழிபுரத்தில் பிடிபட்டது….

சுழிபுரம் சவுக்கடி கடற்பகுதியில் அரிய வகை உயிரினம் ஒன்று மீனவரின் வலையில் சிக்குண்டுள்ளது. சிறுத்தைப் புலி வகையைச் சேரந்த இந்த உயிரினம் உயிருடன் உள்ளது.

மஸ்கெலியா கவரவில அம்மன் ஆலயத்தில் கொள்ளை….

மஸ்கெலியா பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சாமிமலை கவரவில அம்மன் ஆலயத்தில்இருந்த ஒரு தொகைதங்க ஆபரணங்கள் மற்றும்ஆலயத்தில் வைக்கபட்டிருந்தஉண்டியல் என்பன உடைக்கபட்டு இனந்தெரியாதவர்களால் களவாடபட்டுள்ளதாக மஸ்கெலியாபொலிஸார் தெரிவித்தனர்.

பெருந்தோட்ட பெண்களிடத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் தையல் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டது!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணித்தலைவியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமாகிய சஸ்வதி சிவகுருவின் பன்முகப்படுத்ப்பட்ட நிதியிலிருந்து 15 பயனாளிகளுக்கு  தையல்இயந்திரங்கள்   அட்டன் பூல்பேங்க் நிலையத்தல் 05.09.2018 வழங்கிவைக்கப்பட்டது. நுவரெலியா பிரதேசசபைக்குற்பட்ட பெண் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வில்  பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பொகவந்தலாவை கிவ் தோட்டத்தில் 70 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா

இந்திய அரசாங்கத்தின் நிதியீட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் பொகவந்தலாவை கிவ் தோட்டத்தில் 70 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 02-08-2018 திகதியன்று இடம்பெற்றது. 

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பிரதி பொலிஸ் மாதிபர், ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மனோ கணேசன் அறிவுறுத்தல்….

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் வலயம், பிரதேச செயலக பிரிவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் புத்தர் சிலையை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியில் வெலிஓய விகாரையை சேர்ந்த கல்கமுவ சத்வ போதி தேரர் தலைமையிலான குழு நேற்று எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இடம்பெற்ற பதட்ட நிலைமைகள் தொடர்பில், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அந்த பகுதியை உள்ளடக்கும் பிரதேச சபை தலைவர் ஆகியோரின் எழுத்து மூலமான அனுமதி இன்றி எந்த  ஒரு மத ஸ்தலத்தையும்...
Read More

சதிகளை முறியடித்து கிவ் தோட்டத்தில் இந்திய வீடமைப்புத்திட்டம் முன்னெடுப்பு : சோ.ஸ்ரீதரன்

”பொகவந்தலாவை கிவ் தோட்டத்தின் இந்திய வீடமைப்புத்திட்டத்தினை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டத்தை முறியடித்து இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு முன்வந்த பயனாளிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

டிக்கோயா பிரதேச வைத்தியசாலையின் பாரிசவாத புணர்வாழ்வு சிகிச்சைபிரிவு திறந்து வைக்கபட்டது!!

டிக்கோயா பிரதேச வைத்தியசாலையின் பாரிசவாத புணர்வாழ்வு சிகிச்சை பிரிவு 04.09.2018.செவ்வாய்கிழமை டிக்கோயா வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் கிக்சிறி கருணாதிலக்க அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை வைத்தியர் பீடம் தலைவரும் விஷேட வைதத்தியருமான திருமதி. பத்மாகுனரத்தன அவர்களினால் பாரிசவாத புணர்வாழ்வு சிச்சை பிரிவு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்டது

நோர்வூட் பிரதேசசபைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வினை முன்னிட்டு நோர்வூட் பிரதேசத்திற்கு வருகை தந்த ஆறுமுகன் தொண்டமான்

நோர்வூட் பிரதேசசபைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு எதிர் வரும் 15ம் திகதி இடம்பெறவிருக்கின்ற வேலையில் 03.09.2018.திங்கள் கிழமை நோர்வூட் பகுதிகளில் அதற்கான காணியினை தெரிவுசெய்யும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நோர்வூட் பிரதேசத்திற்கு வருகை தந்து பார்வையிட்டார்.
error: Content is protected !!