முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

By

sasi

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு முரளிரகுநாதன் பகிரங்க கடிதம்……..

அனைத்து இனத்தவர்களும் தாங்கள் சம குடிமக்கள் என்று உணரும்போதுதான் – “சச்சரவின் குரல்” ஊமையாக இருக்கும், அப்போதுதான் “நாங்கள் ஒரு வலிமையான நோக்கத்திற்கு அணிவகுத்துச் செல்ல முடியும் .அப்போது நமது குடிமக்கள் அனைவரின் முன்னேற்றமும் ஒன்றாகும்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒலி பெருக்கி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

டிக்கோயா போடைஸ் புதுக்காடு தோட்ட ஆலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒலி பெருக்கி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு முன்னாள் அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இன்று (10) திகதி ஆலய முன்றலில் நடைபெற்றது.

மலையக தியாகிகள் தினம் – பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது!!

மலையக தியாகிகள் தினம் (10.01.2020) அன்று பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் திகாம்பரத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மலையக்த்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் 53 வது பிறந்த தின வைபவத்தினை முன்னிட்டு மலையக பகுதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று (10) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன..

பழனி திகாம்பரம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு குடிநீர் திட்டம் திறந்து வைப்பு!!

சமர்ஹில் வட்டாரம் கிளவட்டன் தோட்டத்தில் குடிநீர் திட்டம் திறப்பு விழா நோர்வூட் பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச அமைப்பாளருமாகிய மு.இராமச்சந்திரனின் தலைமையில் இடம்பெற்றது

ஆயிரம் ரூபாய் சம்பள விடயம் தையில் வழி பிறக்கும் நம்பிக்கை தெரிவிக்கின்றார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவர் என தெரிவித்துள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என சம்பளம் விடயம் தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தியகல பகுதியில் வேன் விபத்து – 5 பேர் படுங்காயம்

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை தியகல – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் தியகல பகுதியில் 10.01.2020 அன்று காலை 8.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 5 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிப்பு!!

பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோணகல தோட்டம் 10 ஆம் கட்டை கீழ் பிரிவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த பாதையை பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

லிந்துலையில் பிரஜா பொலிஸ் நிகழ்வு!!

நேற்று (8)லிந்துலை நு/ சரஸ்வதி தமிழ் மா வித்தியாலய பிரதான மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது
error: Content is protected !!