முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

கழுகினால் ஏற்பட்ட விபரீதம்- பெண் தொழிலாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா மேற்பிரிவு தோட்டபகுதியில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த ஒரு பெண் தொழிலாளர் மீது குளவி கூடு உடைந்து விழுந்தமையினால் பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 22.01.2020.புதன்கிழமை முற்பகல் 11மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை- பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தலவாக்கலை நகர வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதர்களினால் 21.01.2020 அன்று திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

சிவனொளிபாதமலைக்கு அண்மித்த வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம்!!

சிவனொளிபாதமலைக்கு அண்மித்த பகுதியான ரிகாடன் வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா சீதா கோயிலை புனர்நிர்மானம் செய்ய இந்தியா 5 கோடி ரூபா நிதியுதவி…

இலங்கையில் உள்ள சீதா கோயிலை புதுப்பிக்க மத்திய பிரதேச அரசு ரூ.5 கோடி நிதி வழங்கவுள்ளது.மேலும், இந்த கோயில் சீரமைப்பு பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது . மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் சமீபத்தில் இலங்கை சென்றனர்.இவர்கள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துப் பேசினர்.இந்தச் சந்திப்பில் சீதை சிறைப்பிடித்து இலங்கையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த நுவரெலியா பகுதியில் சீதா கோயில் உள்ளது.இந்தக் கோயிலை மேம்படுத்த மத்திய பிரதேச...
Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் அதிகரிப்பு? ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிப்பு!!

மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி (10.01.2020) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன.

நாவலபிட்டி வனபகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

நாவலபிட்டி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவலபிட்டி ஹிந்தின்ன வனப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் 31.12.2019.செவ்வாய்கிழமை முற்பகல் 11.30மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

ஹட்டன் பகுதியில் மஞ்சள் கோட்டில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் மோதி விபத்து ஒருவர் காயம்!!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மல்லியைப்பூ சந்தியில் உள்ள மஞசள் கோட்டுப்பகுதியில் இன்று (30) பகல் 12.00 மணியளவில் திகதி மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்துக்கொண்டிருந்த சொகுசு பஸ்,பத்தனைபகுதியிலிருந்து வருகை தந்த முச்சக்கரவண்டி,கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பிரதேசத்தினை நோக்கி வந்துகொண்டிருந்த ஜீப் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
1 2 3 109
error: Content is protected !!