முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

வேலையில்லாத ஆயுள்வேத பட்டதாரிகள் சுகாதார அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம்!

வேலையில்லாத ஆயுள்வேத வைத்திய பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து, சுகாதார அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டள்ளது. வேலை கிடைக்காத ஆயுள்வேத வைத்திய பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2010ஆம் ஆண்டு முதல், 700க்கும் அதிகமான ஆயுள்வேத வைத்திய பட்டதாரி மாணவர்களுக்கு அரசாங்க வேலை பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும், வேலை பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரம் கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் எனினும், எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் இதுவரை இல்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

கைத்தொலைபேசியின் மூலம் உரையாடிக்கொண்டு சென்ற மாணவர் மீது புகையிரதம் மோதி மாணவன் பலி!

கைத்தொலைபேசியின் மூலம் உரையாடிக்கொண்டு மூடப்பட்டிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார். இந்த சம்பவம் கம்பஹா மேம்பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. கம்பஹா பண்டாரநாயக்க மகாவித்தியாலயத்தில், உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயது மாணவரே பலியானவராவார்.

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து!

சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை இரத்தானது, கடந்த 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, இன்று (15) தொழிற்சங்க உறுப்பினர்களுடன் பேச்சுவார்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாவில் இறப்பர் முத்திரைகளுக்குப் பதிலாக ஸ்டிக்கர்களை அறிமுகம்!

வெளிநாட்டு பிரஜைகளுக்கான விசாவில் அச்சிடப்படும் இறப்பர் முத்திரைகளுக்குப் பதிலாக ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையம் மூலம் நிரப்பி பூர்த்தி செய்து விண்ணப்பிக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம்!

மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக இருக்க வேண்டும். தேர்தலின் போது சமர்ப்பிக்கப்படும், வேட்பு மனுக்களில் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பு!

தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 23 ஆம் திகதி நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கிற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கை இலக்கு வைத்து அபிவிருத்திற்காக சீன உதவி!

முப்பதாண்டு காலப் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சீனத் தூதுவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது, வடக்கிற்கு உதவ சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சீனாவின் ஆற்றலுக்கேற்ப, சிறிலங்காவுக்கு குறிப்பாக வடக்கு மாகாணத்துக்கு உதவத்...
Read More

ஜூலை 4ம் திகதி நள்ளிரவு தொடக்கம் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்?

ஜூலை மாதம் தொடக்கம் நூற்றுக்கு 15 சதவீதமாக பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாதவிடத்து, ஜூலை மாதம் 4ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் இந்த எச்சரிக்கையை விடுத்தார். தற்போது 8 ரூபாவாக காணப்படும் ஆகக் குறைந்த கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீ!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைப்பதற்காக 50துக்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்தாக துறைமுக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கொழும்பு தீயணைப்பு பிரிவு மற்றும் துறைமுக தீயணைப்பு பிரிவு என்பனை இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle