முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

தெல்பத்தை தோட்டத்தில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!

பதுளை தெல்பத்த தோட்டத்தில் 16 வயது நிரம்பிய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை தெல்பத்த தோட்டத்தை சேர்ந்த ராஜபூபதி சோனியா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் சடலமாக மீட்கபடுவதற்கு முதல் நாள் (31 இரவு) இரவு தனது சகோதரருடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் என தெரிய வருகிறது. இந்த மர்ம மரணம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருடன் புதிய வடிவம் எடுப்பதால் செய்திகள் தாமதமாகலாம் வாசகர்களே!

    கருடன் இணையத்தளம் புதிய வடிவம் நோக்கி பயணிப்பதால் செய்திகள் தாமதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் வாசகர்களே! விரைவில் வழமைக்கு திரும்புவோம் அதுவரை செய்திகளின் தாமதத்துக்கு வருந்துகிறோம்.

போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்படமாட்டர்கள்! : பிரதமர்

போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கமாட்டார்கள். அந்த பொறிமுறையில் இலங்கையின் உள்ளுர் நீதிபதிகளே இருப்பார்கள் என்று இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமையன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற படையதிகாரிகளுடனான சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பிக்கும் போது இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் தமது நிலைப்பாட்டை வெளியிடுவார்...
Read More

ஜூன் 01 – நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் மருத்துவ சங்கங்கள்!

வைத்தியத்துறையில் காணப்படும் வேலைவாய்ப்புக்களை நிரப்புவதற்கு வைத்திய சேவைப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் நாடுதழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையைக் கருத்தில் கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலை, கம்பஹா, புத்தளம், கேகாலை மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகிய வைத்தியசாலைகளிலும், கொழும்பு லேடி ரிஜ்வே, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, கொழும்பு சொய்ஷா, சிறிமாவோ பண்டாரநாயக்க...
Read More

நான்கு வருட காலமாக தியானத்தில் இருந்தவர் மரணம்! ;காரைதீவில் சம்பவம்!

பவளன்  என அழைக்கப்படும் செல்லத்துரை நடேசானந்தம் வயது 57(பொறியியலாளர்) நான்கு வருட காலமாக காரைதீவு 7 விஷ்ணு கோவில் வீதியில் காணப்படும் கட்டிடம் ஒன்றில் காயத்திரி மந்திரம் கூறி தியானத்தில் இருந்துள்ளார். அண்மைய காலமாக மின்குமிழ் எரியாமை  மற்றும் அண்மையில் உள்ளவர்களுக்கு துர்நாற்றம்  வீசுதல் மற்றும் சிற்சில காரணங்களால் ஏற்பட்ட சந்தேகத்தினால் கதவை உடைத்து உள்ளே உறவினர்கள் சென்றனர். மிகவும் மோசமான நிலையில் அவரது பூதஉடல் அங்கே காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும்...
Read More

மீண்டும் மழை: வெள்ளம், மண்சரிவு குறித்து அவதானமாக இருக்கவும்!

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அடை மழையினால் களனி கங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. மையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது தொடர்பில் குறிப்பிடுகையில், “தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் பாரிய மழை பெய்து வருகின்றது. தவலம பிரதேசத்தில் நேற்றைய தினமே நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. களனி கங்கையினதும் நீர் மட்டம் சில பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றது. நீர்ப்பாசன திணைக்களத்தின் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள்...
Read More

மன்னிப்புக்கோர தயாராகவே உள்ளேன்! : கிழக்கு மாகாண முதலமைச்சர்!

கிழக்கு மாகாண முதலமைச்சர், தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக் கோருவேன் எனத் தெரிவித்துள்ளார். கடற்படை அதிகாரி ஒருவரை அவதூறாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்அஹமட் பேசியதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, கிழக்கின் முதலமைச்சருக்கு எதிராக நேற்று (26) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையின் மதகுரு அம்பிட்டியே...
Read More

கொரிய மொழிப் போட்டிப் பரீட்சை ரத்து! : அரசு தீர்மானம்

கொரியாவில் தொழில்வாய்ப்புக்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்வதற்காக இலங்கையில் நடாத்தப்படும் கொரிய மொழிப் போட்டிப் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கணனியில் இணையத்தளம் மூலம் இதற்காக விண்ணப்பிக்கும் முறைமையொன்றை பிரதியீடாக அறிமுகம் செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், கொரிய மனித வள அபிவிருத்தி அமைப்பு விண்ணப்பிக்கும் முறைமையை மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தினால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரத்து செய்யும் தீர்மானத்தை எடுத்துள்ளது.

சிறுநீரக நோயாளிகளுக்கு சீன உதவியுடன் இலங்கையில் சிறப்பு வைத்தியசாலை!

இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, 600 மில்லியன் யுவான்களை (சீன பணம்) சீனா வழங்கியுள்ளது. நேற்று குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இலங்கையின் சார்பாக கையெழுத்திட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்க் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதி பலனாகவே இந்த உதவி கிட்டியுள்ளது.
error: Content is protected !!