முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

கொஸ்கம மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்! : வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்!

வெடிப்புக்கு உள்ளான கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள ஹைலெவல் வீதி போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பேரூந்து, நோயாளர் காவு வண்டிகள், பிரதேசத்தில் உள்ளவர்களின் வாகனங்கள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடும் வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்தினால் சேதமடைந்த பகுதிகளில் உள்ள வெடிப் பொருள் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமல் வீதி திறக்கப்பட்டமைக்கு எதிராகப் பிரதேச மக்கள் நேற்றைய தினம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து...
Read More

ஒலிவாங்கியில் ஏற்பட்ட கோளாறு சதியல்ல! : சபாநாயகர் விளக்கம்

நாடாளுமன்ற ஒலிவாங்கியின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு சதிச் செயல் அல்ல என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இன்று காலை சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதுபோன்ற சில சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடைபெற்றுள்ளதாக, சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, குறித்த கட்டமைப்பு 15 வருடங்கள் பழைமையானது என கூறிய அவர், ஊடகங்கள் இது தொடர்பில் செய்தியிடுகையில் தவறான முறையைக் கையாண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்படி, சில ஊடகங்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு...
Read More

நிதியமைச்சர் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றில் சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.

வாகன கொள்வனவுக்கு அரசினால் சலுகைகள் ஊடகவியலாளர்களின் கேள்விகளால் தடுமாற்றமடைந்த அமைச்சர்கள்!

கொழும்பில் அமைச்சரவை முடிவினை அறிவிக்கும் மாநாட்டின் போது, அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கு அரசினால் சலுகைகள் வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்டபோது தடுமாற்றமான பதில்களை அமைச்சர்கள் வழங்கியதை காணமுடிந்தது. மக்கள் மீது வரிச்சுமையினை அதிகரிக்கின்றது அரசு, ஆனால் அமைச்சர்களின் வாகன கொள்வனவிற்கு சலுகைகளை வழங்குவது முறையா? என ஊடகவியலாளர்கள் கேள்விகளை அமைச்சர்களிடம் தொடுத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர்கள் 20 வருடங்களிற்கு ஒருமுறை அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே வாகன கொள்வனவிற்கு சலுகைகள்...
Read More

30 அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரல்!

அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் 30 பேரின் வாகன கொள்வனவிற்காக 117 கோடி ரூபாய் நிதி கோரப்பட்டுள்ளது. குறித்த நிதியினைக் கோரி துணை மதிப்பீடு பத்திரமொன்று நிதி அமைச்சரின் சார்பாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்றையதினம்(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அதிக நிதி கோரப்பட்டுள்ளதாகவும், குறித்த துணை மதிப்பீடு மூலம் அமைச்சர் சரத் பொன்சேகா 7 கோடி ரூபாய் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read More

கொஸ்கம பாதையை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில்!

அவிஸ்ஸாவெல – கொழும்பு பிரதான வீதியானது நேற்றைய தினம் திறந்து விடப்பட்டநிலையில் இன்று பிரதேசவாசிகள் குறித்த வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதையை போக்குவரத்திற்காக திறந்து விடுவதற்கு முன் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரக் கோரியே குறித்த பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் சாலாவ இராணுவ முகாம் வெடிப்பினை பார்வையிட வருபவர்களால் தாம் பெரும்பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பகிடிவதையினை முறையிட புதிய ஒன்லைன் முறை!

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை அறிவிப்பதற்கு ஒன்லைன் முறையை (Online System) அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளார். கல்வி துறையில் தற்போதைய நிலை மற்றும் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணை நேற்று விவாதிக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார். இதில் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரன ஆகியோர்இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது, பகிடி வதைகளை...
Read More

பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை!

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. காணியொன்றை முறைகேடாக விற்பனை செய்து 64 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இன்றும் காற்றுடன் கூடிய மழை! : மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

மத்திய மலைநாட்டு மேற்கு பகுதிகள் மற்றும் வட ,வட மத்திய, கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூரியுள்ளது. காங்கேசன்துறை திருகோணமலை மட்டக்களப்பு , பொத்துவில் மற்றும், ஹம்பாந்தோட்டை வரையுள்ள கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாளத்திற்கு 70 கிலோ மீட்டருக்கு அதிகமாக வீசும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற் பிரதேசங்களுக்கு அருகாமையில் வாழும் மக்களுக்கு அவதானம் விடுக்கப்பட்டுள்ளது.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle