முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்!

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ‘பிரதீப் மாஸ்டர்’ என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, ‘கஜன் மாமா’ எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில்...
Read More

புலிகளின் ஈழக்கனவைத் தோற்கடிப்போம்! : ஜனாதிபதி சூளுரை

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தெஹிவளை – கல்சிசை நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். 27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன்...
Read More

அமெரிக்காவில் மோடி – ஒபாமாவுடன் 2 ஆண்டுகளில் 7வது முறையாக சந்திப்பு!

வாஷிங்டன் – பொதுவாக அமெரிக்க அதிபர் ஒருவர் உலகத் தலைவர்களைச் சந்திப்பது என்பது வெகு அபூர்வமாகவே நடைபெறும். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற காலத்திலிருந்து அவருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இடையிலான சந்திப்பு, ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்களைப் போல அடிக்கடி நடந்து கொண்டே இருக்கின்றது. அந்த வகையில், எதிர்வரும் ஜனவரியோடு பதவி விலகிச் செல்லும் ஒபாமா, தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் பல முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகின்றார். நேற்று ஒபாமா- மோடி...
Read More

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை நாளை முதல் 6 நாட்களுக்கு மக்களின் பார்வைக்கு!

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை, மக்கள் பார்வைக்காக நாளைய தினத்தில் இருந்து 6 நாட்களுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இந்த நிகழ்வு இடம் பெறஇருப்பதாகவும், ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு இணங்க நடவடிக்கைமுன்னெடுக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. பிரித்தானியர் ஆட்சி காலத்தில் (1804) இந்த இல்லம் பிரித்தானிய ஆளுநரின்உத்தியோகபூர்வ இல்லமாக காணப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கை ஆளுநரின் இல்லமாக இருந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது....
Read More

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரம்! : சீனா எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை விவகாரம் தொடர்பில் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் புறச் சக்திகளின் தலையீடு ஆரோக்கியமானதாக அமையாதென சீனா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் புதிய போராட்டமொன்றை வெடிக்கச் செய்ய வழியமைத்து விடக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையுடன் புதிய திட்டங்களை முன்னெடுக்க விரும்புவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஸியான்லியாங் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் சீனா பேணி வரும் உறவுகளில்...
Read More

200-க்கும் அதிகமான புராதனச் சின்னங்களை மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 668 கோடி ரூபாய் மதிப்பிலான புராதன சிற்பங்களை ஒப்படைத்துள்ளது அமெரிக்கா. அதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தெய்வச் ‌சிலைகள் உள்ளிட்டவை திரும்ப அளிக்கப்பட்டுள்ளன. சென்னையில் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான சோழர் காலத்துச் சிலையும் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியப் புராதனச் சின்னங்கள் மீது அக்கறை...
Read More

கொஸ்கம வெடிப்பு : அடிப்படை விசாரணைக்காக இராணுவ நீதிமன்றத்தை நிறுவ தீர்மானம்!

கொஸ்கம – சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரிக்க, அடிப்படை விசாரணை இராணுவ நீதிமன்றத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துக்கு காரணமான விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கையிட தேசிய பாதுகாப்புச் சபையின் பணிப்புரைக்கு அமைய இராணுவத் தளபதியினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என, பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய நூல்களை பாடசாலைகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை!

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் வினாத் தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் பரீட்சைகளில் முகங்கொடுக்க மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle