முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

நாளை நள்ளிரவு முதல் உயர்தர வகுப்புகளுக்குத் தடை

இந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கல்விப் பொதுத் தாரதர உயர்தர மாணவர்களுக்காக நடத்தப்படும் அனைத்து தனியார் வகுப்புகளுக்கும் நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள புகையிரத ஊழியர்கள்

புகையிரத ஓட்டுனர்கள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிரத அதிபர்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் ஒன்றில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரு சிறுமிகள் பரிதாப பலி!!

கண்டி – யாழ் பிராதன வீதியில் இயக்கச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுமிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகவீன தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை, அதிகமான ஆசிரியர்கள் தெரிவிப்பு!!

26ந் திகதி நடைபெறவுள்ள அரசியல் பழிவாங்கல் நியமங்களுக்கு எதிராக நடைபெறப்போகும் கூட்டுத்தொழிற்சங்க நடவடிக்கைக்கு அதிகமான மலையக ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லையென தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!!

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை தொடர்ந்து நாளை(26) மேற்கொள்ளப்படவிருந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

தோட்ட முகாமையாளரின் அடாவடித்தனம்; கொட்டகலையில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் இனவாதம் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முறையற்ற விதத்தில் தோட்டத்தொழிலாளர்களை வேலை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தொழிலாளர்கள் 21.07.2018 அன்று கிறிஸ்லஸ்பாம் தொழிற்சாலைக்கு முன்பாக 21.07.2018 காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். சுமார் 175 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் குறித்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் தோட்டத்தொழிலாளர்களை சிங்களத்தில் பேசுமாறு வற்புறுத்தி வருவதாகவும், கொழுந்து இல்லாத தேயிலை மலைகளில் 18 கிலோவினை எடுக்குமாறு பணித்தாகவும்,...
Read More

1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

பாடசாலைகளில் உயர்தரத்தில் தொழிற்பாடங்களைக் கற்பிப்பதற்காக 1150 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒருவருக்கு நியமனக் கடிதம் வழங்குவதையும் அருகில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் இருப்பதையும் படத்தில் காணலாம்.  

திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதம் இயக்குவது கட்டாயமாக்கப்படும்!!

திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்குமாறு பல தரப்புக்களில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
error: Content is protected !!