முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

இடம்பெயர்ந்தவர்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீள்குடியேற்றம்! : மனோ

யுத்தம் காரணமாக வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தப்படுவார்கள். இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைவரையும் மீள்குடியேற்ற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக வட மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களை அடையாளம் காண்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழு ஒன்றை நியமித்துள்ளார். இந்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார், யுத்தம் காரணமாக வட மாகாணத்திலிருந்து வெளியேறிய மக்கள் அனைவரும் இந்த ஆண்டின்...
Read More

இன்று மழை பெய்யும்: சாலாவ பிரதேச கிணறுகளை மூடிவிடுமாறு வேண்டுகோள்!

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், சாலாவ இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தில் அப்பிரதேசம் புகைமண்டலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அப்பிரதேசத்தில் மழை பெய்தால் அப்புகை மண்டலத்தில் காணப்படும் நச்சுப் பதார்த்தங்கள் நீருடன் கலக்கும் வாய்பு இருப்பதாக சுகாதாரப் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களது கிணறுகளை மூடி வைக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மலையக அரசியல்வாதிகள் தமக்கென ஒழுக்கக் கோவை ஒன்றை உருவாக்கிக் கொள்ளவது அவசியம்! : மைக்கல் ஜோக்கிம்

கடந்த வாரத்தில் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்ட சிலரின் செல்பி எடுத்த சம்பவம் உட்பட இந்த போராட்டத்தை ஒரு வகையில் கேலிக்கூத்திற்கு உரியதாக ஆக்கிவிட்டதாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டடிருந்ததுடன் அனேக அச்சு இலத்திரனியில் ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டிருந்தன. ஒரு சமூகத்தின் வாழ்வாதார பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற இந்த போராட்த்தில் கலந்கொண்டவர்கள் அந்த சமூகத்தின் கௌரவத்தையும், பிரச்சினையின் பாரதூரத்தையும் நாட்டுக்கும்...
Read More

காலியில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் யுவதியின் மரணத்தில் காதலன் சந்தேகம்!

காலியில் தற்கொலை செய்து கொண்ட தமிழ் யுவதியின் மரணம் குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த யுவதியின் காதலன் காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்பாறை பாண்டிருப்பை சேர்ந்த யுவதியும் மட்டகளப்பை பெரியகல்லாரை சேர்ந்த இளைஞனும் நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளனர் எனினும் ஆரம்பத்தில் அதற்கு விருப்பம் தெரிவித்த யுவதியின் குடும்பத்தினர் பின்னர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். மேற்படி யுவதி தற்கொலை செய்து கொள்வதற்கு அரை மணித்தியாலத்துக்கு முன்னர் தன்னை வீட்டார் சித்திரவதை செய்வதாக அழைப்பேசியில் குறுந்தகவல்களை தனது...
Read More

இராணுவ முகாம் தீ அனர்த்தம்; அவிசாவலை பகுதியில் உள்ள பாடசாலை அரச அலுவலகங்களுக்கு விடுமுறை!

அவிசாவலை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு நாளை 06/06/15 நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தை அடுத்தே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தை தீவிர விசாரணைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொஸ்கம-சாலாவ பகுதிகளில் மின்வெட்டு அமுலில்!

கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட  திடீர் தீப்பரவலினால் தொடர்ந்தும் வெடிப்புக்கள் இடம்பெறுகின்றமையுடன் கொஸ்கம – சாலாவ அண்டிய பகுதிகளில் மின்வெட்டு அமுலில் உள்ளதாகவும், அப்பிரதேச மக்களை பாதுகாப்பா இடங்களுக்கு செல்லுமாறும் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இராணுவ முகாமின் திடீரென தீ பரவல்!: கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதை மூடப்பட்டுள்ளது

கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமில் திடீர் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தீயுடன் பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. இன்னும், கொழும்பு – அவிஸ்ஸாவெல்ல பாதையானது கொஸ்கமயிலிருந்து மூடப்பட்டுள்ளதுடன், பிரதேசவாசிகளை வெளியேறுமாறும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீ சம்பவத்தை பார்வையிட குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு மீண்டும் சீனாவிற்கு அழைப்பு!

இரு­நாட்டு உறவுகளையும் மேலும் வலுப்­ப­டுத்தும் வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சீன ஜனா­தி­பதி ஜின் பிங் விசேட அழைப்பு விடுத்­துள்­ள­தாக அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்­க­ளத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பி­ன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்; எமது நாட்டில் ஆட்சி மாற்றத்­தினை தொடர்ந்து சீனா­வு­ட­னான பொருளாதார உறவும் அர­சியல் உறவும் முற்­றாக பாதிப்­பட்­டுள்­ள­தாக எதி­ர்ப்­புக்கள் பல விமர்­சங்­களை முன்­வைத்­தி­ருந்­தன. இது தொடர்பில் அர­சாங்கம் எந்தவி­த­மான கருத்­துக்­க­ளையும்...
Read More

பொகவந்தலாவயில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட 250 டின்களுடன் ஒருவா் கைது!

பொகவந்தலாவ நகரபகுதியில் புகையிலை தூள் அடைக்கபட்ட 250 தகர டின்களுடன் ஒருவா் நேற்று இரவு பொகவந்தலாவ பொலிஸாாரால் கைதுசெய்யபட்டுள்ளாா். கைது செய்யபட்ட நபா் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் அஐர்படுத்தபட உள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா். பொகவந்தலாவ நிருபா் எஸ்.சதீஸ்
error: Content is protected !!