முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

மீண்டும் மழை: வெள்ளம், மண்சரிவு குறித்து அவதானமாக இருக்கவும்!

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அடை மழையினால் களனி கங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. மையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது தொடர்பில் குறிப்பிடுகையில், “தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் பாரிய மழை பெய்து வருகின்றது. தவலம பிரதேசத்தில் நேற்றைய தினமே நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. களனி கங்கையினதும் நீர் மட்டம் சில பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றது. நீர்ப்பாசன திணைக்களத்தின் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள்...
Read More

மன்னிப்புக்கோர தயாராகவே உள்ளேன்! : கிழக்கு மாகாண முதலமைச்சர்!

கிழக்கு மாகாண முதலமைச்சர், தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக் கோருவேன் எனத் தெரிவித்துள்ளார். கடற்படை அதிகாரி ஒருவரை அவதூறாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்அஹமட் பேசியதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, கிழக்கின் முதலமைச்சருக்கு எதிராக நேற்று (26) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்நிலையில் முதலமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையின் மதகுரு அம்பிட்டியே...
Read More

கொரிய மொழிப் போட்டிப் பரீட்சை ரத்து! : அரசு தீர்மானம்

கொரியாவில் தொழில்வாய்ப்புக்களுக்கு ஆட்களைத் தெரிவு செய்வதற்காக இலங்கையில் நடாத்தப்படும் கொரிய மொழிப் போட்டிப் பரீட்சையை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கணனியில் இணையத்தளம் மூலம் இதற்காக விண்ணப்பிக்கும் முறைமையொன்றை பிரதியீடாக அறிமுகம் செய்யவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், கொரிய மனித வள அபிவிருத்தி அமைப்பு விண்ணப்பிக்கும் முறைமையை மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தினால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ரத்து செய்யும் தீர்மானத்தை எடுத்துள்ளது.

சிறுநீரக நோயாளிகளுக்கு சீன உதவியுடன் இலங்கையில் சிறப்பு வைத்தியசாலை!

இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, 600 மில்லியன் யுவான்களை (சீன பணம்) சீனா வழங்கியுள்ளது. நேற்று குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இலங்கையின் சார்பாக கையெழுத்திட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்க் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதி பலனாகவே இந்த உதவி கிட்டியுள்ளது.

நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் 10 கிலோ தங்கத்துடன் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் ஒருவர் பத்து கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே பத்து கிலோ தங்கத்தினை பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று காலை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே நாமல் ராஜபக்ஷவின் செயலாளரை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் கைவிடப்பட்டுள்ள காணிகள் மீள் கையளிக்க சட்டமா அதிபருக்கு உத்தரவு!

வன்னியில் கைவிடப்பட்ட காணிகளை மீள உரியவர்களுக்கு கையளிக்காமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம், சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. யுத்தம் நடைபெற்றபோது வன்னி மாவட்டத்தில் மக்கள் தங்களது காணிகளை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் குறித்த மக்கள் தமது இருப்பிடங்களுக்கு சென்ற போது அந்த பகுதிகளை வேற்றவர்கள் கைப்பற்றியிருந்தனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சம்பந்தப் பட்ட காணிகளை மீண்டும் உரியவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாக காணி...
Read More

அரச மருத்துவர்கள் நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு!

அரசாங்க மருத்துவர்கள் எதிர்வரும் 31ம் திகதி நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நியமன பிரச்சினையை கருவாக கொண்டு இந்த பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்றை திறக்க அமைச்சரவை நேற்றையதினம்(25) அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோரின் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அலுவலகம் அமைக்கப்படவுள்ளது இதன்மூலம் காணாமல் போனோரின் குடும்பங்களை மீண்டும் இணைத்தல் மற்றும் நிவாரணங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் பிரதமர் முன்வைத்த குறித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2866 குடும்பங்கள் மீள்குடியேற முடியாது! : கட்டட ஆராய்ச்சி நிறுவனம் திட்டவட்டம்!

மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள பத்து மாவட்­டங்­களில் ஏற்­க­னவே குடி­யி­ருந்த 2866 குடும்­பங்­களை எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள பகு­தி­களில் எக்­கா­ரணம்கொண்டும் மீள்­கு­டி­யேற்ற முடி­யாது என கட்­டட ஆராய்ச்சி நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. இதுதொடர்பில் கட்­டட ஆர­யாச்சி நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ பிரி வின் பணிப்­பாளர் ஆர்.எம்.எஸ் பண்­டார மேலும் குறிப்­பி­டு­கையில், மண்­ச­ரிவு அனர்த்­தங்­களின் கார­ண­மாக பல இழப்­பு­க­ளுக்கு இலங்கை முகங்­கொ­டுக்க நேர்ந்­துள்­ளது. குறிப்­பாக கடந்த வருடம் மீரி­ய­பெத்தை மண்­ச­ரி­வினால் பலர் உயி­ரி­ழந்­தனர். அதே­போன்று கடந்த 17 ஆம் திகதி அர­நா­யக்க பிர­தே­சத்தில் ஏற்­பட்ட...
Read More
error: Content is protected !!