முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

நிதியமைச்சின் கீழ் சட்டவிரோத மதுபான ஒழிப்பு பிரிவு ஆரம்பம்!

சட்டவிரோதமான முறையில் மதுபானம் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தடுப்பதற்காக, சட்டவிரோத மதுபான சோதனை பிரிவொன்று நிதியமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை இனி கட்டாயமில்லை! : பிரதமர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இனிமேல் முக்கியமான ஒன்றாக இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த இந்த பரீட்சை புதிய கல்வி கட்டமைப்பின் அடிப்படையில் வெறுமனே மாணவர்களின் வகுப்பேற்றத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகவே இருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைகழகத்திற்கு பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக மாணவர்களுக்கு சில பாடங்கள் கட்டாயமானது என அவர் கூறியுள்ளார். கல்வி பொதுத் தராதர சாதரண தரப்...
Read More

நடிகர் பாலுஆனந்த் மரணம்!

விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி, நடிகர் சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு மற்றும் ரசிகன் ஒரு ரசிகை, உனக்காகப் பிறந்தேன், பொட்டுவச்ச நேரம், சிந்துபாத் உள்ளிட்ட பல பங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். மேலும், பவர்ஸ்டார் சீனிவாசனை வைத்து ஆனந்த தொல்லை என்ற படத்தை கடைசியாக இயக்கினார். ஆனால் அந்தப் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் நிலுவையில் உள்ளது. இத்துடன் பல்வேறு தமிழ் படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மனங்களை...
Read More

இலங்கையின் நகர அபிவிருத்திற்கு உலக வங்கியிடமிருந்து நிதி!

இலங்கையிலுள்ள நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக 55 மில்லியன் டொலர்களை உலக வங்கி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அபிவிருத்தி, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களுக்காகவே குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், காலி, கண்டி ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு குறித்த நிதி பயன்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது. உலக வங்கியால் வழங்கப்படவுள்ள குறித்த நிதியானது குறைந்த வட்டியுடன் 5 வருடஇடைவெளியில் 25 வருடங்களில் மீள் செலுத்துவதற்கு ஏதுவாக வழங்கப்படவுள்ளதாகவும் உலக வங்கியின்...
Read More

முன்னாள் ஜனாதிபதியின் இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நிறைவு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு இன்றுடன்(03) முழுமையாக நீக்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பின் ஒரு தொகுதி இதற்கு முன்னதாக நீக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு வழங்கி வந்த எஞ்சிய படை அதிகாரிகளும் இராணுவ உத்தியோகத்தர்களும் இன்று வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. குறித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் இன்று அல்லது நாளை அளவில் முழுமையாக வாபஸ்...
Read More

கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்!

நியாயமற்ற முறையில் மக்களின் மீது வரிக்கு மேல் வரி விதிக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று மாபெரும் போராட்டத்தில் களமிறங்கவுள்ளது. இதன்பிரகாரம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெறவுள்ளது. ஆர்ப்பாட்டகாரர்கள் மருதானை டெக்னிக்கல் சந்தியிருந்து ஊர்வலத்தை ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையம் வரைக்கும் வருகை தரவுள்ளனர். இந்த எதிர்ப்பு பேரணியில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார...
Read More

மாகாணத்திற்குள் வாழுகின்ற சிறுபான்மை மக்களின் எதிர்பார்புக்களை மக்கள் கருத்தறியும் குழு கண்டுகொள்ளவில்லை! : கணபதி கனகராஜ்

புதிய அரசியல் அமைப்பு குறித்த மக்களின் கருத்தறியும் குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ள சிபாரிசுகளில் மாகாணங்களுக்குள்ளேயே சிறுபான்மையினராக வாழுகின்ற மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு எவ்விதமான தீர்வையும் முன்வைக்கவில்லை. என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள மாகாண சபைகள் பல இனங்களை கொண்டவையாக காணப்படுகின்றன. தற்போதைய மாகாண சபை நிர்வாகங்கள் மாகாணத்தில் உள்ள பெரும்பான்மை மக்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்ட ஏற்பாடுகளை கொண்டே காணப்படுகின்றன. நடைமுறையில் சிறுபான்மை மக்கள் இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்பட்டு வருகின்றனர்....
Read More

ஷிரந்தி ராஜபக்ஷவினை கைது குறித்த முடிவை அமைச்சரவையே தீர்மானித்தது! : அநுர

கைது செய்யப்படக் கூடாதவர்கள் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் தீரமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷவை கைது செய்யக் கூடாது என அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான அமைச்சரவையொன்றை வைத்துக் கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் வஜிர அபேவர்தன குற்றவாளிகளை பாதுகாப்பதற்கு தமது அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்தியுள்ளார். அரசாங்கம் நடத்திய...
Read More

வெளிநாட்டில் தஞ்சமடைந்தவர்களுக்கு கடவுச்சீட்டுப் பெற புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

அரசியல் அழுத்தங்கள் மற்றும் ஏனைய காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இம்மாதம் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீக்குவதாக சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அரசாங்கம் நேற்று(01) அறிவித்துள்ளது. அகதி அந்தஸ்து அல்லது அரசியல் புகலிடம் பெற்று வெளிநாடு ஒன்றில் வாழும் இலங்கையருக்கு கடவுச்சீட்டு வழங்கக் கூடாதென 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அகதி அந்தஸ்திலோ, புகலிடம் கோரியோ வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின்...
Read More
error: Content is protected !!