முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டியின் இறுதி போட்டி.

ஹேலிஸ் நிருவனத்தின் கிழ் இயங்கும் கேளனிவெளி மற்றும் தலவாகலை ஹொரன ஆகிய பெருந்தோட்ட நிருவனங்களின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான தேயிலை கொழுந்து பறிக்கும் இறுதி போட்டி ஹேலிஸ் நிருவனத்தின் ஏற்ப்பாட்டில் 25.01.2020.சனிகிழமை காலை நானுஒயா ரதாதல விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது

நுவரெலியாவில் இராதா – பதுளையில் அரவிந்த் – தேர்தலில் போட்டியிட தயார்!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிடுவதற்கு ஏகமனதாக மத்திய குழுவும், நிர்வாக குழுவும் தீர்மானித்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் தெரிவித்தார்.

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கு விசேடமான இராசயன புகை பிரயோகம்!!

தலவாக்கலை பகுதியில் டெங்கு நோயாளர் ஒருவர் இணங்கண்டதற்கு இணங்க முதல் கட்டமாக தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நுளம்புகளை அழிப்பதற்கான விசேட இராசாயன புகை (25/01/2020)பிரயோகிக்கப்பட்டது.

சிவனொளிபாதமலை வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எட்டுபேர் கைது!!

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பெற்றோசே பிரீட்லேன் தோட்டபகுதியில் உள்ள சிவனொளிபாதமலைக்கு சொந்தமான வனப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த கைது சம்பவமானது 24.01.2020.வெள்ளிகிழமை இரவு 09.30மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு தோட்டத்தை ஒப்படைக்குமாறு கோரினால் அதனை வெறுமனே ஒப்படைக்கமுடியாது- ரொஷான் இராஜதுறை தெரிவிப்பு!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபாய் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் எம்மை அழைத்து பேச்சிவார்தை நடாத்தியுள்ளார்கள் இருந்தாலும் நாம் இன்னும் அரசாங்கத்திற்கு இன்னும் எவ்வித அறிவித்தல்களையும் நாம் வழங்க வில்லை ஆனால் இருந்த போதிலும் ஒரு சிலர் கூறுகிறார்கள் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கமுடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார்கள்

பொகவந்தலாவ ஹொலிரோசரி பாடசாலையின் வீதி ஓட்ட போட்டி!!

இன்று பொகவந்தலாவ ஹொலிரோசரி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் கட்டமாக வீதி ஓட்ட போட்டி வலய கல்வி பணிப்பாளர் திரு P. ஶ்ரீதரனின் ஆலோசனையின் கீழ் அதிபர் திரு P. குமரேசன் தலைமையில் இடம்பெற்றது.

மலையக அரசியல்வாதிகள் பிரதேசசபைகளை பிரித்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்கின்றனர்- எலப்பிரிய நந்தராஜ குற்றச்சாட்டு!!

மலையக அரசியல்வாதிகள் கடந்த அரசாங்கத்தின் போது பிரதேசசபைகளை அதிகரிக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கவனம் செலுத்த பட வேண்டுமென வலியுறுத்தி ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது 23.01.2020மாலை வேலையில் இடம்பெற்றது.

பெருந்தோட்ட கம்பனிகள் மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கியே ஆகவேண்டும்- கணபதி கனகராஜ்

எதிர்வருகின்ற மார்ச் முதலாம் திகதியிலிருந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம்1000 ரூபா சம்பளத்தை பெருந்தோட்டக் கம்பனிகள் வழங்கியே ஆகவேண்டும். அரசியல் இலாபம் தேடுவோறை இணைத்துக்கொண்டு முட்டுக்கட்டை போட முற்பட்டால் பெருந்தோட்டங்கள் உரிமை மாற்றத்துக்கு உள்ளாகும். என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வீதி விளக்குககள் பொருத்த துரித நடவடிக்கை வேண்டும்….

காசல்ரீ தோட்ட இளைஞர்களினால் தோட்ட பிரதான வீதிகளுக்கு வீதி விளக்குகள் பொருத்த முன்னெடுக்கப்படும் தீவிர முயற்சிக்கு சபைத்தலைவர் உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நோர்வூட் பிரதேசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்தார்
1 2 3 451
error: Content is protected !!