முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

திம்புள்ளயில் மண்சரிவு காரணமாக வீடுகள் சேதம்…

திம்புள்ள பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 5 வீடுகளின் சமயலறைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறந்து விடப்பட்டுள்ளது!!

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 14.08.2018 அன்று காலை வான்கதவு ஒன்று திறக்கப்பட்ட நிலையில் நீரின் உயர் மட்டம் வெகுவாக கூடுவதனால் 15.08.2016 அன்று காலை மேலதிகமாக இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை – அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு!!

கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது…

அக்கரபத்தனை பெருந்தோட்ட பகுதியில் லங்கம் கம்பனியின் கீழ் இயங்கும் வேவர்லி தோட்டத்தில் முன்னால் தொழிற்சங்க தோட்ட கமிட்டி ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உண்ணாவிரதத்தின் ஊடான சத்தியாகிரக போராட்டம் தற்காலிகமாக 14.08.2018 அன்று கைவிடப்பட்டுள்ளது.

தலவாக்கலை வனிகசேகரபுரத்தில் பாரிய மண்சரிவு – போக்குவரத்திற்கு தடை!!

மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக தலவாகலை வனிகசேகர புரத்தில் பாரிய மண்சரிவு ஒன்று 14.08.2018.காலை வேலையில் ஏற்பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு!!

மத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக கடுமையான மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

கொட்டகலையில் 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது…

கொட்டகலை டிரேட்டன் பகுதியில் 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் 13.08.2018 அன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையகத்தில் சீரற்ற காலநிலையினால் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில்…

மலையகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில் அட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் மீண்டும் மாணிக்ககல் அகழ்விற்கு அனுமதி வழங்கபட மாட்டாது!!

பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் மீண்டும் மாணிக்ககல் அகழ்விற்கு அனுமதி வழங்கபட மாட்டாது அம்பகமுவ அபிவருத்தி கூழு கூட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவிப்பு.
error: Content is protected !!