முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

தோட்டத் தொழிலாளா்களின் சம்பள உயா்வு கோரிக்கை ஒரு சமூகத்தின் பொருளாதார பிரச்சினையாகும் சகலரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றினைய வேண்டும்- கணபதி கனகராஜ் தெரிவிப்பு

  தோட்டத் தொழிலாளா்களின் சம்பள உயா்விற்கான கூட்டு ஒப்பந்தமும் மற்றும் தோட்டத் தொழிலாளா்களின் நலன்புரி விடயங்களுக்கான கூட்டு ஒப்பந்தமும் மீண்டும் புதிப்பிக்கவிருக்கின்ற இக்காலப்பகுதியில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல தரப்பினரும் ஒருமித்த கருத்துடன் செயற்பட வேண்டும். என மத்திய மாகாணசபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளா் காங்கிரசின் உப தலைவருமான கணபதி கனகராஜ் தொிவித்துள்ளார்.

மலையகத்தில் கடும் மழை- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடி கடும் மழை பெய்துவருகின்றது இதனால் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் கீழ் பிரிவு தோட்டத்தில் 13ம் இலக்கம் கொண்ட குடியிருப்பில் 09 வீடுகள் உள்ள லயன் தொகுதிக்கு முன்பகுதியில் பாரிய மண்மேடு சரிந்துள்ளது விழுந்துள்ளது.

டிக்கோயா கிழங்கன் தோட்ட காணிவிவகாரம் குறித்து அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் அமைதியின்மை – குரல் பதிவு இணைக்கப்பட்டுள்ளது!!

அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டம் 13.08.2018.திங்கள் கிழமை இடம் பெற்றபோது அம்பகமுவ பிரதேச கூழுதலைவரும் அம்பகமுவ பிரதேசசெயலாளர் ஆர்.பி.டி.சுமனசேகர மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் ஆகியோருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம்…

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரி மூன்றாவது நாளாக 13.08.2018 அன்றும் அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.

தேயிலை ஊடாக கம்பனிகள் பெறும் இலாபத்தின் பெரும் பகுதியை தொழிலாளர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் நவீன் வழியுறுத்தல்

தேயிலை ஊடாக கம்பனிகள் பெறும் இலாபத்தின் பெரும் பகுதியை தொழிலாளர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வழியுறுத்தும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க இது தொடர்பாக சர்வதேச கம்பனிகளோடு உள்நாட்டு கம்பனிகளோடும் எதிர்காலத்தில் கலந்தாலோசிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

இன ஐக்கியத்தோடும் உரிமைகளை பெற்றவர்களாகவும் வாழக்கூடிய இலங்கையர்களை உருவாக்க வேண்டும் என்பதே பிரதமரின் கொள்கையாகும் – கயந்த கருணாதிலக தெரிவிப்பு

இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வேறுபாடு அற்ற வகையில் சகல உரிமைகளையும் அனுபவிக்கும் பட்சத்தில் தாய் நாட்டின் மீதான ஆதரவும், அபிமானமும் மேலோங்கும் என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

உள்ளுராட்சி சபைகளின் செற்பாடுகளுக்கு பிரதேச செயலங்கள் தடையாக இருந்தால் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் செல்வோம் – வே.இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு

உள்ளுராட்சி சபைகளின் செற்பாடுகளுக்கு பிரதேச செயலகங்கள் தடையாக இருந்தால் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் செல்வோம் என அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம் 13.08.2018 அன்று எடுக்கபட்டது.

டிக்கோயா எட்லிதோட்டத்தில் பாரிய மண்சரிவு-30குடும்பங்களை சேர்ந்த 110பேர் இடம் பெயர்வு!!

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா எட்லி தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் டிக்கோயா சலங்கந்த பிரதான வீதியின் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

மலையகத்தில் கடும் மழை- அட்டன் சலன்கந்த வீதியில் மண்சரிவு போக்குவரத்தும் தடை

அட்டன் சலன்கந்த பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண்சரினால் அதிகாலை முதல் அவ் வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்
error: Content is protected !!