முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

பயனாளிகளுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டதின் கீழ் கொத்மலை பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு வருவோரை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு தேவையான மூலதன உள்ளீட்டு உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கொத்மலை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 16.10.2017 இடம் பெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண விவசாய இந்து கலாசார தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களுடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் குமார திசாநாயக்க மற்றும் கொத்மலை பிரதேச செயலாளர்  உத்தியோகத்தர்கள் மற்றும் கலந்துக்கொண்ட பயனாளிகளின்...
Read More

கண்டியில் இளைஞர்களை போதையில் அலைய வைக்கும் நபர்கள்!!

கண்டி மற்றும் கண்டியை அண்மித்த பிரதேசங்களில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சந்தேக நபர்கள் இருவரை சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை வில்லைகளுடன் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர்கள் இளைஞர்களிடம் மேற்படி போதை வில்லைகளை விற்பனை செய்து வந்ததாகவும் அவ்வாறு அவர்கள் உடன்வைத்திருந்த 800 வில்லைகளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இச் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயனித்த வேனையும்...
Read More

தலவாக்கலையில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு பொலிஸார் அறிவுறுத்தல்!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலவாக்கலை நகருக்கு பொருட்கள் கொள்வனவிற்கு வருவோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு தலவாக்கலை பொலிஸார் வேண்டுகோள்விடுத்துள்ளனர். பண்டிகை காலத்தை முன்னிட்டு தலவாக்கலை நகரில் தற்காலிக வியாபார கடைகள் அதிகமாக அமைக்கபட்டுள்ளதுடன் பொருட்கள் கொள்வனவிற்கான வரும் அதிக பொதுமக்கள் மத்தியில் திருடர்களின் நடமாட்டமும் காணபடலாம். எனவே தலவாக்கலை நகருக்கு வருகைத் தரும் பொதுமக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான முச்சகரவண்டியில் பயணிப்பதுரூபவ் தெரியாதவர்களிடம் ஏதேனும் பொருட்களை கொடுத்தால்  வாங்குவதையும் உட்கொள்வதையும் தவிர்த்துக் கொள்வதுடன் தாங்களின் பணம்...
Read More

மத்திய மாகாண அமைச்சரின் வாழ்த்து செய்தி!!

தீபத் திருநாளாம் தீபாவளியின் மகிழ்ச்சி ஒளி பிலம்பு தோன்றுவதுபோலஇந்துக்கள் வாழும் இடமெல்லாம் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளை இலங்கையில் வாழும் என் சக இந்துக்களுடன் தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். தீப திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தீபாவளி என்ற சொல்லுக்கு தீபங்களின் வரிசை என்று பொருள். வரிசையாக விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகை எனவும் நான் என்ற அகந்தை ஒழிக்கப்பட்ட பண்டிகை எனவும்...
Read More

மலையகமெங்கும் இலவச விஞ்ஞான கருத்தரங்கு!!

மலையக மாணவர்களின் நலன் கருதி க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு உதவும் பொருட்டு இலவச விஞ்ஞான பாட கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லொளி வீசும் தீபஒளித்திருநாளில் இன்பங்கள் பெருகட்டும் – சோ.ஸ்ரீதரன்!!

நல்லொளி வீசும் தீபஒளித்திருநாளில் இன்பங்கள் பெருகட்டும். மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் அனைத்து வாழ் தமிழர்களுக்கு தீபத்திருநாள் நல்வாழத்துக்களை தெரிவித்துள்ளார்……..

தீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார் – அட்டன், தலவாக்கலை நகர் கலைகட்டியது!!

தீபாவளி பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயாராகி வருகின்றனர். அட்டன் தலவாக்கலை நகரங்களில் தீபாவளி வியாபாரம் கலைக்கட்டியுள்ளது.

டெரிக்கிளயர் த.வி புதிய அதிபர் நியமிக்கப்படாமைக்கு என்ன காரணம்?

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட டெரிக்கிளயர் த.வி அதிபராக கடமையாற்றிய திருமதி ரவிச்சந்திரன் இவ்வருடம் இடமாற்றம் பெற்று சென்றதோடு அந்த வெற்றிடத்திற்கு அதிபர் சேவையில் உள்ளவரை நியமிக்கப்படாததால் பாடசாலை ஆசிரியர் குழாமிற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதாக பல்வேறு கருத்துக்கள் எமக்கு கிடைத்த வண்ணம் உள்ளது.

தீபாவளிக்கு கொழும்பிலிருந்து வீடுகளுக்கு வரும் இளைஞர்களே உங்களுக்கு ஓர் வேண்டுகோள்!!

மலையகத்தின் கௌரவத்தை பாதுகாப்போம். தீபாவளிக்கு கொழும்பிலிருந்து வீடுகளுக்கு வரும் இளைஞர்களிடம் பிரிடோ சிறுவா் கழகங்கள் கோரிக்கை விடுத்துள்ளது….
error: Content is protected !!