முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

இதொகாவில் இணையுமாறு அனுஷா சந்திரசேகரனுக்கு அழைப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு இன்றைய இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எடுத்துக்காடாக அமைந்துள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளரான ராஜமணி பிரசாந்த தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியவை வருமாறு, கினிகத்தேனை நகரில் நடைபெற்ற இ.தொ.காவின் மே தினக் கூட்டத்தில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணிக்கும் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அத்துடன், தோட்ட தொழிலாளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனால், இலங்கை தொழிலாள் காங்கிரஸ் மூலம் அரசியல் பயணத்தை ஆரம்பித்து...
Read More

தாய் அநாதையாக்கியதால் மகன் தற்கொலை! லுணுகலையில் சோகம்

பிள்ளைகள் நால்வரையும் தனித்து விட்டு தாய் சென்றதினால், மனமுடைந்த சிறுவன், கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், லுணுகலைப் பகுதியின் சூரியகொடை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. சூரியகொடையைச் சேர்ந்த திமுத்து விராஜ் சன்ஜீவ என்ற 13 வயது நிரம்பிய சிறுவனே, சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளவராவார். சடலம் தற்போது, லுணுகலை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி கூறப்படுவதாவது, தற்கொலை செய்துகொண்டுள்ள சிறுவனுடன் நான்கு பேர் தாயின் பராமரிப்பில், சூரியகொடை கிராமத்தில் வாழ்ந்து வந்தனர்....
Read More

சீன பிரஜை செலுத்திய காரில்மோதி ஒருவர் பலி

சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பயணமாக நுவரெலியாவிலிருந்து எல்ல நகரிற்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த வேளையில் குறித்த கார் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயனித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து பண்டாரவளை வெலிமடை பிரதான வீதியின் மிரஹாவத்த பகுதியில் நேற்றுஇடம்பெற்றுள்ளது. மிரஹாவத்தை தபால் நிலையத்தில் சேவையாற்றும் 54 வயதுடைய பண்டாரவளை திகனதென்ன பகுதியை சேர்ந்த லலித் சாந்த என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். இதன்போது வாகனத்தை செலுத்திய...
Read More

கட்டுப்பாட்டு விலையால் வணிகருக்கு வந்த சோதனை!

கட்டுப்பாட்டு விலையை குறிக்காமல் அரிசி பக்கட்டுக்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில், ‘சதோச’ நிறுவன முகாமையாளர் கைது செய்யப்பட்டார். இவர், சியாம்பலாண்டுவை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் செய்யப்பட்டதும், நீதிபதி நிலந்த விமலரட்ன, ‘சதோச’ முகாமையாளரை கடுமையாக எச்சரித்ததுடன், பத்தாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையமொன்ற ‘சதோச’ நிறுவன சியாம்பலாண்டுவை முகாமையாளருக்கே, மேற்படி தண்டனை விதிக்கப்பட்டதாகும். மொனராகலை மாவட்ட அரச அதிபர் டி.எஸ். பத்மகுலசூரியவின்...
Read More

இராஜாங்க அமைச்சரை 12 இல் நீதிமன்றில் ஆஜராகுமாறு பதுளை நீதிமன்றம் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் செனவிரட்னவை, செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி) பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை, மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில், சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றினையடுத்து, நீதிபதி மேற்படி உத்தரவினைப் பிறப்பித்ததோடு, அதற்கான அழைப்பானையை அனுப்பும்படியும் பணித்தார். கடந்த ஊவா மாகாண சபை தேர்தல் பிரசார வேளையின் போது, பதுளையில் ஐ.தே.க. பிரசாத கடமையில் ஈடுபட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் ஐ.தே.க. உறுப்பினரை தாக்கியமை குறித்த முறைப்பாட்டினையடுத்தே, நீதபிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் அவரது...
Read More

சிலரின் ஒற்றுமையின்மையால் மலையகத்தில் கட்சிகள் பிரிந்து தனியே சென்றன; திலகர் எம்பி!

இலங்கைக்கு உழைப்பாளர்களாக வந்த மலையக மக்களை ஒன்றுபட்ட தொழிற்சங்க அரசியல் சக்தியாகவும் ஒன்று சேர்ந்தார்கள். ஆனால், ஒரு சிலரின் போக்கு ஒற்றுமை நோக்கியதாக இல்லாதிருந்தமையால் காலத்திற்கு காலம் பிரிவுகளும் பிளவுகளும் தோன்றின. அறுபதுகளில் அஸீஸ் பிரிந்து ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை உருவாக்கினார். அவரோடு அமைச்சர் மனோகணேசனின் தந்தை வி.பி. கணேசனும் இணைந்தார். அதே அறுபதுகளின் நடுப்பகுதியில் வி.கே.வெள்ளையன் வெளியேறினார். தொழிலாளர் தேசிய சங்கத்தைத் தாபித்தார்.எண்பதுகளின் இறுதியில் பெ.சந்திசேகரன் வெளியேறினார். மலையக மக்கள் முன்னணியை ஸ்தாபித்தார். இப்படி காலத்திற்கு...
Read More

மலையக மக்கள் தேசிய இனமாக சுயமரியாதையுடன் வாழவேண்டும்; அமைச்சர் மனோ!

மலையக மக்களை அரசியல்,சமூக ரீதியாக ஒரு தேசிய இனமாக சுயமரியாதைமிக்க தன்மானமுள்ள சமூகமாகவும் ஈழத் தமிழர்,சிங்களவர்,முஸ்லிம் மக்களுக்கு நிகரான சமூகமாகவும் உருவாக்குவதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நோக்கமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச மொழி அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். தலவாக்கலை நகரில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார.; அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தற்போது இந்தியாவில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
Read More

ஒரு கிலோ கஞ்சாவுடன் இரண்டு பிள்ளைகளின் தாய் கைது

விற்பனைக்காக வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், அதனை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (01) மாலை ஊவாபரணகம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஊவாபரணகம கட்டுகல்ல பகுதியில் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த இரகசியத் தகவலின்படி சந்தேகநபரான 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த தாயின் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா...
Read More

மலையக மக்களை நடுவீதியில் விடுவதற்கு சதி:முறியடிப்போம் என்கிறார் முத்து!

மலையக மக்கள் நடந்து வந்த பாதை வேறு. தற்போது நடக்கின்ற பாதை வேறு . எதிர்காலத்தில் நமது இருப்புரிமை இடங்களை பிடுங்கி கொண்டு நம் மக்களை நற்றாட்டில் விடும் சந்தர்ப்பம் உருவாகி வருகின்றது. அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இ.தொ.கா வின் மேதினம் கினிகத்தேனை நகரில் பிரதான பஸ்தரிப்பிடத்திற்கு அருகில் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நடைபெற்றது....
Read More
error: Content is protected !!