முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

மலையகத்தில் காலநிலை சீர்கேடு; மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவி வரும் கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு, இடர்முகாமைத்துவ திணைக்களம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, குகுல கங்கையின் வான் கதவு திறக்கப்படவுள்ளதாகவும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு, இடர்முகாமைத்துவ திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது மஸ்கெலியா – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் ஹப்புகஸ்தென்ன பகுதியில் இன்று விடியற்காலை பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக...
Read More

ஹுலந்தலாவை தோட்டத்தில் புதிய வீடுகள் கையளிப்பு; பிரதமர் உறுதி பத்திரங்களை வழங்கினார்!

நமுனுகல பெருந்தோட்ட கம்பனியின் ஹுலந்தாவ தோட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட 25 வீடுகளும் வீடுகளுக்கான காணி உரித்துகளும் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, சாகல ரத்நாயக்க, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, மற்றும் தென் மாகாணசபை உறுப்பினர்கள்...
Read More

அவிசாவளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே பலி!

அவிசாவளை உக்குவத்தை சந்தியில் நேற்று (17.08.2018) நிகழ்ந்த பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார். உக்குவத்தை சந்தியில் பாதை மின்விளக்கு சமிக்ஞையின் போது நிறுத்தப்பட்டு, பின் புறப்படுகின்றபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பேருந்து சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்கு காரணமென விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். அவிசாவளை பொலிசார் பஸ் சாரதியை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆர்.கமலதாஸ்

லிந்துல்ல மெரேயா தோட்டத்தில் 25 வீடுகளுக்கு அடிக்கல்!

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய லிந்துல மெரேயா தோட்டத்தில் 25 தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் லிந்துல பிரதேச அமைப்பாளர் வீ. சிவானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா, அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் தலைவர் ஜீ. நகுலேஸ்வரன், நுவரெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்...
Read More

சமூக வலயத்தளங்கில் எழுதுவதால் மலையகத்தை மாற்ற இயலாது; களத்தில் இறங்கவேண்டும் ஊவா- மா. உ . ருத்திர தீபன்!

மலையக அரசியல் தலைவர்களையும்,மலையக அரசியல் கலாசாரத்தையும் முழுமையாக வெறுத்தொதுக்கும் நிலையில் எமது இளைஞர் யுவதிகள் தள்ளப்பட்டிருப்பது நமது சமூக மாற்றத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்று ஊவா மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக செயலாளருமான வேலாயுதம் ருத்திர தீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்… சமூக வலைத்தளங்களிலும் இளைஞர் யுவதிகளின் மனதிலும் இன்றைய மலையக அரசியல் என்பது சாக்கடையாக்கப்பட்டுள்ளது.இதற்கு சமூகத்தின் நிலைப்பாடும் மக்களின் பொருளாதாரமுமே காரணமாக அமைந்தாலும் நம்முடைய எண்ணப்பாடும் ஒரு வகையில்...
Read More

அலங்கார உற்சவ நகர்வல தேர்த்திருவிழா

அப்புத்தளை சைவ இளைஞர் மன்ற ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய சதூர்த்தி அலங்கார உற்சவ நகர்வல தேர்த்திருவிழா, எதிர்வரும் 24ஆம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி, 26ஆம் திகதி பிராயச்சித்த அபிஷேகம் மற்றும் மகேஸ்வர பூஜையுடன் நிறைவு பெறும். 24ஆம் திகதி விநாயக வழிபாடு, கணபதி ஹோமம் ஆகியன இடம்பெற்று, 25ஆம் திகதி அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரில் ஸ்ரீ விநாயகப் பெருமான் எழுந்தருளிய அப்புத்தளை நகர் பவனி வலம், 26ந் திகதி பிராயச்சித்த அபிஷேகம் மற்றும் மகேஸ்வர பூஜை...
Read More

அட்டன் பிரதேசத்தில் அட்டக் குப்பைப் பிரச்சினைக்கு முடிவுகட்ட நடவடிக்கை!

அட்டன் பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கழிவுகள் பிரச்சினைகளை தீர்வு காணுவது தொடர்பாக இதனுடன் தொடர்புபட்டுள்ள பல்வேறு அமைச்சுகளின் அதிகாரிகள் அட்டன் பிரதேசத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து நிரந்தர தீர்வு ஒன்றினை பெற்றுக்கொடுக்க முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த விஜயத்தின் போது பெருந்தோட்ட அமைச்சின் அதிகாரிகள், கட்டிட நிர்மாண திணைக்களத்தின் அதிகாரிகள், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், சூழல் பாதுகாப்பு அதிகாரிகள், இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் ஆகியோர் இந்த மேற்பார்வை நிகழ்வில்...
Read More

இறுதிக்கால கொடுப்பனவை பெறாமலேயே இறக்கும் தொழிலாளர்; உடனடியாக வழங்க இதொகா வலியுறுத்து!

மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, ஸ்ரீலங்கா பெருந்தோட்டயாக்கம், எல்கடுவ பிளான்டேசன் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை துரிதகதியில் காலம் தாழ்த்தாது வழங்கப்பட வேண்டும். தேசிய ஆலோசனைசபைக் கூட்டத்தில் சட்டத்தரணி கா.மாரிமுத்து வலியுறுத்து. தோட்டத் தொழிலாளர்களின் சேவைகாலப்பணம், ஊழியர் சேமலாபநிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைநிதி ஆகியன கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மக்கள் தோட்ட அபிவிருத்திச்சபை, ஸ்ரீலங்கா பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பிளான்டேசன் நிர்வகிக்கும் அனைத்து தோட்டங்களில் வதியும் தொழிலாளர்களுக்கு இதுவரையிலும் வழங்கப்படவில்லை. நாம் பலமுறை இதைப்பற்றி...
Read More

டி லீப் விஸனின் வருடாந்த வியாபார சந்தை!

ஆங்கில கல்வி அறிவில் பின் தங்கியுள்ள மலையக மாணவர்களுக்காக பிரத்தியேகமாக மஸ்கெலியாவில் இயங்கி வரும் ஆங்கில பாடசாலை தான் Tea Leave Vision. குறித்த தனியார் ஆங்கில பாடசாலையின் முக்கிய நிகழ்வாக, இளைஞர்கள் மத்தியில் சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் வியாபார சந்தை இந்த வருடமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் மஸ்கெலியா, அட்டன், நல்லத்தண்ணி, பொகவந்தலாவை,நோர்வுட் போன்ற பகுதிகளை சேர்ந்த பொது மக்களும் கலந்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் அங்கு பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களை கருவம் வகையில் ஏற்பாடு...
Read More
error: Content is protected !!