முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

சட்டவிரோதமாக வென்ஜர் தோட்டப்பகுதியில் மாணிக்கல் அகழ்வு இருவர் கைது!

  சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை அட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஜர் தோட்டப்பகுதியில் 01.06.3016 புதன்கிழமை இரவு சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டனர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் குறித்த பகுதியை சுற்றிவளைத்தனர் கைது செய்யப்பட்ட இருவரையும் 02.06.3016 வியாழக்கிழமை அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தை தலையிடச் செய்துள்ளோம்அமைச்சர் திகாம்பரம்

  அரச கூட்டுத்தாபனங்களின் கீழ் இயங்கி வந்த பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதன் பின்னர், கடந்த 24 வருடங்களில் முதன் முறையாக அரசாங்கத்தைத் தலையிடச் செய்து வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணப்படி ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தமே காரணமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டுவரும் கூட்டு ஒப்பந்தம் ஒரு...
Read More

அங்கொட மலையில் மண்சரிவு! : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு

வரக்காப்பொல நகரின் அருகில் உள்ள அங்கொட மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மலையிலுள்ள அதிகளவான கற்கள் இன்று காலை முதல் சரிந்து வருவதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும், இதன் காரணமாக மலையடிவாரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கற்களின் சரிவினால் இதுவரை யாருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலைமகள் இந்து கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறைமதியுகராஜா பிரதம செயலாளர் சந்திப்பு!

  மலைமகள் இந்து மத்திய கல்லூரியில் நிலவி வரும் ஆசிரிய பற்றாக்குறை சம்பந்தமாக இன்று மத்திய மாகாண சபை முதல்வர் துரை மதியுகராஜா ஊடாக, மத்திய மாகாண பிரதம செயலாளர் பி.பி.விஜேரட்ண அவர்களை பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஆர். சதீஸ்குமார் பாத்தஹேவாஹெட்ட பிரதேசசபை முன்னாள் பிரதித் தலைவர் ஆர். சண்முகராஜ் மற்றும் பழைய மாணவர் சங்க பொருளாளர் ந.ஜெகதீஸ் மற்றும் பாடாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் சந்திப்பொன்றை மேற் கொண்டனர்.   நீண்டகாலமாக...
Read More

களுத்துறையில் மண்சரிவு அபாயம் : 39 குடும்பங்கள் இடம்பெயர்வு!

களுத்துறை, நேபொட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 39 குடும்பங்கள் இடம்பெயர்க்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை, நேபொட, ரன்னகல மற்றும் தெபுவன, மாபடவத்தை பிரதேசத்தில் வசித்தவர்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளிலும் 75 மில்லி மீட்டர் அளவை விடவும் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக மேல்மாகாணம், வடமேல், தெற்கு...
Read More

ஜப்பான் ராடாரில் அரநாயக்கவின் புதிய மற்றும் தற்போதைய படங்கள் பதிவு!

அரநாயக்கவில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பாரிய மண்சரிவை, ஜப்பானின் ராடார் செயற்கைக் கோள் புகைப்படமெடுத்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி மண்சரிவு இடம்பெற்றவுள்ள மலைப்பகுதி எவ்வாறு காட்சியளித்தது என்றும், கடந்த 25ஆம் திகதி எந்தப்பகுதி மண்சரிவால் பாதிக்கப்பட்டது என்றும் அந்தப் புகைப்படத்தில் மேலும் பதிவாகியுள்ளது.

மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவனுக்கு தேசிய மட்ட விருது!

நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஆனந்தராஜ் ரங்கேஸ்வரன் தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் விருதினை பெற்றுள்ளார். மேற்படி மாணவன் கடந்த வருடம் கல்வி அமைச்சின் அனுசரணையுடன்  நடைபெற்றுள்ள பாடசாலைகளுக்கிடையிலான சமூக விஞ்ஞானப் போட்டியில், பாடசாலை மட்டம், கோட்டமட்டம், வலயமட்டம், மாகாணமட்ட போட்டிகளில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், தேசிமட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் பாடஆசிரியர்களான திரு.எஸ்.மகேந்திரன். திருமதி எம்.கௌசல்யாதேவி...
Read More

நெளுந்தெனிய பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்?

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கஜுகமைக்கு அருகாமையில் உள்ள நெளுந்தெனிய பள்ளிவாசல் மீதே சிறிய ரக குண்டொன்றை  பெட்டிக்குள் பொருத்தி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி குண்டு வெடிப்பு தொடர்பில் பொலிசார் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் விடுக்கவில்லை.

களனி கங்கையின் நீர் மட்டம் உயரும் சாத்தியம்.. மக்களை அவதானமாக இருக்கக் கோரிக்கை!

நாட்டில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக களனி மற்றும் ஜின் கங்கையில் மீண்டும் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இதுவரை உயரவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. நேற்றைய தினம் காலி மாவட்டத்தின் தவலம பிரதேசத்தை அண்டிய பகுதிகளில்...
Read More
error: Content is protected !!