முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

அரசியல் செயற்பாடுகளை இளைஞர்களை இணையுமாறு திலகராஜ் எம்.பி அழைப்பு

மலையக இளைஞர்கள் பலர் மைதானங்களை புனரமைத்து தருமாறு எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் வீடுகளுக்கான காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

புதிய வாழ்க்கைத் திட்டத்தின் கீழ் மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு முன்கூட்டி சம்பளம் வழங்க மறுப்பு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கத்தில் பணியாற்றும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் முன்கூட்டியே சம்பளம் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.

தோட்டப்புற மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்! எஸ்.ராம்!!

தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக நாட்டிற்கு மகத்தான சேவைகளை வழங்கி வருகிறார்கள் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ராம் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய மக்களிடமிருந்து பிரிந்து சென்ற சமூகம் அல்ல என்றும் அவர் கூறினார். இதனால் அவர்களுக்கு ஏனைய பிரஜைகளைப் போன்று சகல உரிமைகளையும் வசதிகளையும் பெற்றுக் கொள்ளும் நிலை காணப்படுகிறது. தோட்டப்புற மக்களின் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று எஸ்.ராம் கூறினார். நேற்று இடம்பெற்ற மத்திய...
Read More

178 புள்ளிகளை பெற்று சாதனை படைத்த ஞானசேகரன் ஹரிகேஷன்!!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு ஓக்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் முதல் முறையாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 178 புள்ளிகளை பெற்று ஞானசேகரன் ஹரிகே~ன் என்ற மாணவன் சித்தியடைந்துள்ளான். மாவட்ட மட்டத்தில் பாடசாலை ரீதியாக நடைபெற்ற விளையாட்டுப்போட்டி தமிழ்மொழித்தினப் போட்டி என்பவற்றில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த இப்பாடசாலை புலமைப்பரிசில் பரீட்சையிலும் முதல் முறையாக ஒரு மாணவன் சித்தியடைந்துள்ளமை பாடசாலைக்கு கிடைத்த வெற்றியாகும். பாடசாலையின் முன்னேற்றம் தொடர்பாக அதிபர் எஸ் அலெக்சான்டர் தெரிவிக்கையில் இப்பாடசாலை அதிக கஸ்ட...
Read More

நல்லதண்ணீர் ஆரம்ப பிரிவு தமிழ் வித்தியாலய மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சரித்திர சாதனை!

2017 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலய பாடசாலையான நல்லதண்ணீர் ஆரம்ப பிரிவு தமிழ் வித்தி்யாலயம் மஸ்கெலியாமாணவி செல்வி.செல்வமாணிக்கமஹொஸ்ணி என்சலேட்டடா 191புள்ளிகள் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் மாகாண மட்டத்தில் தமிழ் மொழி மூலம் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். இவரோடு 9 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். Qualified students Marimuthu Dilshan175 marks Kalimuthu Sarmilan175 Selvaraj Anitha172 Manoharan Disaan170 Selvakumar Simsawn163 Kugendran Habeersan Thiruselvam...
Read More

நுவரெலியா, அம்பகமுவ பிரதேசசபைகளை பிரிப்பது குறித்து மலையக தலைவர்களுடன் பேச்சு!

மலையக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாநகர, நகர, பிரதேச சபைகள் தேர்தல் திருத்த சட்டமூல பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) கையளித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நுவரேலியா, அம்பகமுவ பிரதேச சபைகளை 5 அலகுகளாக பிரிப்பது குறித்து மலையக தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த...
Read More

பதுளையில் சக மாணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மாணவன்!!

க.பொ.த. (சா/த) பரீட்சையில் 40 க்கும் குறைவான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதுளை வலயக்கல்வி அலுவலகம் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, இரு மாணவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு மாணவன் மற்றைய மாணவனை பிளேட் போன்ற கூரிய கத்தியினால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் முதுகுப் பக்கத்தில் 8 அங்குல அகலமான வெட்டுக் காயத்துடன், பதுளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த மாணவனை தாக்கிய மாணவனை கைது...
Read More

ஜனாதிபதியை சந்தித்த பதுளையை சேர்ந்த 7 வயது மாணவி!!

ஏழு வயதான எம்.என்.அமானி ராயிதா என்ற சிறுமி பதுளையிலிருந்து தனது பெற்றோருடன் கொழும்புக்கு வந்து ஜனாதிபதியை சந்தித்துள்ளார். ஜனாதிபதியை சந்திக்கும் வரை ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று அச்சிறுமி நம்பியிருக்கவில்லை. தன்னை சந்திக்கும் எதிர்பார்ப்புடன் சிறுமியொருவர் ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் இருப்பதாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. தனது வேலைப்பளுவின் மத்தியிலும் தன்னை சந்திப்பதற்காக வந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்ற ஜனாதிபதி தவறவில்லை. அதிகாரிகளை அனுப்பி சிறுமியை தன்னிடம் அழைத்த ஜனாதிபதி, அச்சிறுமியிடம் பேசி மகிழ்ந்தார்....
Read More
error: Content is protected !!