முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

அரசியல் பிணக்குகளை ஓரங்கட்டிவிட்டு தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்ள அணைவரும் முன்வர வேண்டும் – வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு…

மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிகரித்து கொள்ள தான் பெரியவன், சிறியவன் என்ற தன்னகத்தை ஓரங்கட்டிவிட்டும், அரசியல் பிணக்குகளை ஓரங்கட்டிவிட்டும் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்ள அணைவரும் முன்வர வேண்டும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மலையக சனத்தொகைக்கேற்ப மலையகத்திலிருந்து வருடத்திற்கு 2000 பேர் மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு உள்வாங்க நடவடிக்கை வேண்டும்- பேராசிரியர் தனராஜ் தெரிவிப்பு.

மலையகத்திலிருந்து பல்கழகம் செல்லும் எண்ணிக்;கையில் சற்று அதிகரித்த போதிலும் நாம் அது குறித்து திருப்தி அடைய முடியாது. இன்று இலங்கையிலுள்ள 16 பல்கலைகழகங்களுக்கு சுமார் 180.000 மாணவர்கள் பல்கலைகழக தகுதியினை பெறுகின்றனர். அதில் இந்த பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 30000 பேரை உள்வாங்குகின்றனர். அதில் இவ்வருடம் சுமார் 500 மாணவர்கள் மலையகப் பகுதியிலிருந்து சென்றுள்ளனர். இதில் அதிகரிப்பு காணப்பட்டாலும் நாம் திருப்தி அடைய முடியாது.காரணம் எமது மலையக சனத்தொகைக்கேற்ப சுமார் 2000 மாணவர்களாவது பல்கலைக்கழகம் செல்ல வேண்டும். என...
Read More

கொட்டக்கலை திடீர் பொது சுகதார பரிசோதக குழுவினர் அதிரடி நடவடிக்கை. பல வர்த்தகர்களுக்கு வழக்கு.

கொட்டக்கலை நகரில் (13/01/2020) திங்கட்கிழமை கொட்டக்கலை பொது சுகாதார பரிசோதகர் எஸ் சௌந்தர்ராகவன் தலைமையில் கொட்டக்கலை நகர் முழுவதும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இப்பரிசோதனையின் போது உணவு பொருட்களை உணவு சட்டத்திற்கு எதிராக விற்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு பாவனைக்கு பொருத்தமில்லாத உணவுகளை கைப்பற்றப்பட்ட ஸ்தலத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கப்பட்டது.

முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி..

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா லக்கம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று (13) பகல் 12.45 மணியளவில் வீதியை விட்டு விலகி தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இருவர் காயங்களுக்கு உள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருத்துவபீட மலையகப்பகுதியினை சேர்ந்த மாணவனை காணவில்லை – பெற்றார் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருந்த மலையகப்பகுதியினை சேர்ந்த மருத்துவ பீட மாணவனை காணவில்லை. என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 10.01.2020 இரவு 10.55 முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை கே.சின்னத்தம்பி தெரிவித்தார்.

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கைது

காசல் ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் பொகவந்தலாவ பெற்றோசோ வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் உட்பட ஜந்து சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்

போதை பொருட்களுடன் சிவனொளி பாதமலை வழிபாடு செய்ய சென்ற 19 இளைஞர்கள் இன்று ஹட்டன் பொலிஸாரால் கைது!!

போதை பொருட்களுடன் சிவனொளி பாதமலை வழிபாடு செய்ய சென்ற 19 இளைஞர்கள் இன்று ஹட்டன் பொலிஸாரால் கைது.
error: Content is protected !!