முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

நிர்வாகிகளின் அக்கறையின்மையால் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள தலவாக்கலை ஓக்ஸ்போட் மக்கள்!

மலையகத்தில் சுத்தமான குடிநீர் பெறக்கூடிய வசதிகள் இருக்கின்ற போதிலும்  இம்மக்கள் இன்னும் குடிநீர் பெறமுடியாத நிலையில் வாழ்ந்து வருவது வேதனை குறிய விடயமே. இன்று நாட்டில் உள்ள நகரங்களில் மற்றும் கிராமங்களில் வாழும் மக்களக்கு குடிநீர் தட்டுபாடாக இருந்தாலும் அவர்களுக்கு ஏதோ ஒருவகையில் சுத்தமான குடிநீரே கிடைக்கபடுகின்றது. ஆனால் மலையக பகுதிகளில் அதிகமான வளங்கள் இருக்கின்றபோதிலும் இம்மக்கள் தங்களின் தாகத்தினை தீர்ப்பதுக்காக ஒரு குடம் குடி நீர்க்காக பல மணி நேரம் காத்துகிடப்பதை யாரிடம் சொல்வது. மலையகம் என்றாளே...
Read More

ஹன்தான மலைப்பகுதியில் மண்சரிவு அபாயம்!

கண்டி – உடுவெல பாதையில் ஹன்தான – 4 ஆம் தூண் அருகில் உள்ள பிரதேசத்தில் உள்ள நிலத்தில் விரிசல் காணப்படுவதாக ஹன்தான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 15 ஏக்கர் அளவிலான நிலப்பகுதியில் காணப்படும் இந்த விரிசலில் மண்சரிவு அறிகுறிகள் காணப்படுவதாக அந்த அமைப்பின் செயலாளர் அமித் சேனாநாயக்க தெரிவத்துள்ளார்.

2866 குடும்பங்கள் மீள்குடியேற முடியாது! : கட்டட ஆராய்ச்சி நிறுவனம் திட்டவட்டம்!

மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள பத்து மாவட்­டங்­களில் ஏற்­க­னவே குடி­யி­ருந்த 2866 குடும்­பங்­களை எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள பகு­தி­களில் எக்­கா­ரணம்கொண்டும் மீள்­கு­டி­யேற்ற முடி­யாது என கட்­டட ஆராய்ச்சி நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. இதுதொடர்பில் கட்­டட ஆர­யாச்சி நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ பிரி வின் பணிப்­பாளர் ஆர்.எம்.எஸ் பண்­டார மேலும் குறிப்­பி­டு­கையில், மண்­ச­ரிவு அனர்த்­தங்­களின் கார­ண­மாக பல இழப்­பு­க­ளுக்கு இலங்கை முகங்­கொ­டுக்க நேர்ந்­துள்­ளது. குறிப்­பாக கடந்த வருடம் மீரி­ய­பெத்தை மண்­ச­ரி­வினால் பலர் உயி­ரி­ழந்­தனர். அதே­போன்று கடந்த 17 ஆம் திகதி அர­நா­யக்க பிர­தே­சத்தில் ஏற்­பட்ட...
Read More

அனர்த்தம் தொடர்பான அமர்வில் மலையக தலைமைகள் பங்கேற்காதது ஏன்?

இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் சார்பாக உரையாற்ற மலையகத்தின் பிரதான கட்சிகளின் தலைவர்கள் எவரும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான அமர்வில் பங்கு கொள்ளாதது மலையக மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அனர்த்த நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றி உரையாற்றியிருந்தாலும் மலையகத்திலுள்ள அமைச்சர்களோ அல்லது இராஜாங்க அமைச்சரோ உரையாற்றவில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம்...
Read More

கண்டி நுவரெலியா உட்பட ஐந்து மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய எச்சரிக்கை!

ஐந்து மாவட்டங்களுக்கு நாளை வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை நாளை பிற்பகல் வரை அமுலில் இருக்கும் எனவும் கட்டட ஆராய்ச்சி நிறுவனம்  அறிவித்துள்ளது. கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த பிரதேச செயலகங்கள் காணப்படுவதாகவும் பின்வரும் அறிவித்தலில்  கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

புஸ்ஸல்லாவையில் நிலம் தாழிறக்கம்! : 45 குடும்பங்களை சேர்ந்த 147 பேர் இடம் பெயர்வு!

ஊடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோகம தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலம் கீழ் இறக்கத்தினால் லயன் இலக்கம் குடியிருப்பு தொகுதிகள்  வெடிப்புற்ற நிலையில் தோட்ட மக்களும் பக்கத்தில் காணப்படும் கெலேகால கிராம மக்களுமாக 45 குடும்பங்கனை சேர்ந்த 147 பேர் இடம் பெயர்ந்து  புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில்  தற்கலிகமாக தங்க வைக்கபட்டுள்ளனர். ஆரம்பகட்ட நடவடிக்கையாக பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால்  உலர் உணவு பொருட்கள் வழங்கள் உட்பட அனைத்து வசதிகளும்...
Read More

பொகவந்தலாவையில் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட மாணவியே தற்கொலை!

கடந்த மாதம் முச்சக்கரவண்டியில் கடத்தப்பட்ட மாணவியே தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் பொகவந்தலாவ ஆரியபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதியோடு ஏற்பட்ட காதலே இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. மேற்படி மாணவி தற்கொலை செய்து கொண்ட விடயம் தொடர்பில் கருடன் தனது கவலையை தெரிவித்துக் கொள்கிறது. சதீஸ்.

MAY 14 இந்திய உதவித் தூதுவரின் அனுசரனையுடன் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு!

இந்திய உதவித் தூதுவரின் அனுசரனையினூடாக நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளுக்கு ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆங்கில நூல்கள் இப்பாடசாலை அதிபர்களிடம் மத்திய மாகாண இந்து கலாச்சார தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி ரமேஸ்வரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.       இந்நிகழ்வு அட்டன் சீடா நிலையத்தில் இடம்பெற்றது.  இதன்போது இந்திய உதவித் தூதுவர் ராதா வெங்கட்ராமன் மற்றும் மத்திய மாகாண முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் பி.பி தேவராஜ் உட்பட...
Read More

எதிர்வரும் 18ஆம் திகதி கும்பாபிஷேகத்துக்கு தயாராகும் சீதையம்மன் ஆலயம்!

சீதையம்மன் ஆலயம் தற்போது புதுப் பொலிவு பெற்று வருகின்றது.” இம்மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற இருக்கும் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை  முன்னிட்டு உலக வரலாறு பெற்ற நுவரெலியா சீதையம்மன் ஆலயம் புதுப் பொலிவு பெற்று வருகின்றது. இந்த ஆலயம் தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, வர்ணப் பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டு, மேற்படி வேலைத்திட்டங்கள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது.   பா.திருஞானம்
error: Content is protected !!