முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

சிறுவர்களை வேலைக்கமர்த்தல், அவர்கள் மரணமடையும் போது அறிக்கை விடும் கலாச்சாரத்தை மாற்றியாக வேண்டும்!

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்கள் கொழும்பில் வேலைக்கு அமர்த்தப்படுவதும் அவர்கள் மரணமடையும் போது அரசியல்வாதிகளும் சில வேளை அரச சார்பற்ற நிறுவனங்களும் அறிக்கை விடுவதும் ஒரு கலாச்சாரமாகியிருக்கிறது. சுமதி, ஜீவராணி உட்பட மரணடைந்த பல சிறுவர்கள் தொடர்பாக அரசியல்வாதிகள் ஆர்பாட்டங்களும் அறிக்கைகளும் வெளியிட்டதுடன் சில வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால் எவ்வித ஆக்கபூர்வ பிரதிபலனும் இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற போது அரசியல்வாதிகள் எவரும் உதவி செய்யவில்லை என்று மக்கள் குறை சொல்வதும் ஒரு கலாச்சாரமாயியுள்ளது. பெரும்பான்மை அல்லது...
Read More

பண்டாரவளை எல்ல பகுதியில் காட்டுத் தீ 300 ஏக்கர் நாசம்!

பண்டாரவல எல்ல பகுதியில் உள்ள மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட தீயினால் சுமார் 300 ஏக்கர் நாசமாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தீ பரவலுக்கான காரணம் தெரியவில்லை, இந்த தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இராவணா எல்லைவரை தீ பரவலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்ட்டன் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

நோர்ட்டன் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இந்த துப்பாக்கி நபர் தொடர்பான மேலதிக செய்தி, விபரங்கள் கிடைத்ததும் விரிவான செய்தி வெளியாகும்.   நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர்.

மஸ்கெலியாவில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட வியாபாரி கைது!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட வியாபாரி ஒருவரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்துள்ளனர். மேற்படி மாணவியை தனது வியாபார நிலையத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய மேற்படி வியாபாரி முற்பட்டார் என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து வியாபாரி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வியாபாரியை நீதிமன்றில் ஆஜார் செய்ய இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

மஹஒய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீ பரவல்!

மஹஒய – அகுல்லப பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், நேற்றைய தினம் திடீர் என தீ பரவியுள்ளது. மலைப்பாங்கான பிரதேசத்திலே இவ்வாறு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பிரதேச மக்கள் மற்றும் வன பாதுகாப்பு அதிகாரிகள் போன்றவர்களினால் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவில் கஞ்சாவுடன் பெண் கைது!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பீ கவரவில ஜனபதய பகுதியில் 11 கிராமும் 110 மில்லிகிராம் கஞ்சாவுடன், மேற்படி பகுதியைச் சேர்ந்த வெள்ளசாமி மகேஸ்வரி (வயது 54) என்ற பெண்ணை செவ்வாய்க்கிழமை (28) மாலை, பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். மஸ்கெலியா அதிரடி படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அப்பெண்ணிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. போதைப்பொருள் வியாபாரத்தில் மேற்படி பெண் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்துள்ளார் எனவும் இதனால், இப்பகுதியிலுள்ள இளைஞர்கள் போதைக்கு...
Read More

அட்டன் பகுதியில் போலி விளம்பரம் மூலம் மோட்டார் சைக்கிள் விற்பனை; பொலிசார் எச்சரிக்கை!

அட்டன்பிரதேசத்தில் நவீன ரகமோட்டர் சைக்கில் விற்பனை செய்வது தொடர்பிலான சமூக வலைதளங்களில் வெளிவரும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர் அட்டன் பகுதியில் புதியரக நவீன மோட்டார் சைக்கிள்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக சமூகவலைதளங்களில் விளம்பரங்களை செய்து பணம் கறக்கும்செயற்பாடுகள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விளம்பரங்களை பார்த்து தெலைபேசியில் தொடர்பு கொள்பவர்களிடம் ஈ.சி.கேஸ் ஊடாக முற்பணம் பெற்றுகொள்ளும் மேற்படி மோசடிகாரர்கள் முற்பணம் பெற்றப்பின் குறித்த சிம் காட் செயல் இழக்க...
Read More

நுவரெலியா மாவட்டத்திலுள்ள சதொச நிலையங்களில் நிபந்தனை!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள சதொச நிலையங்களில் ரூபா 500 இற்கு பெருமதியான பொருட்கள் கொள்வனவு செய்தால் மாத்திரமே சீனி ஒரு கிலோ வழங்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சதொச நிலையத்தில் சீனி ஒரு கிலோ ரூபா 87 இற்கு விற்பனை செய்கின்ற போதும் ஏனைய வர்த்தக நிலையங்களில் 110 ரூபாய் முதல் 120 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதுதொடர்பில் சதொச நிலைய அதிகாரியிடன் வினவிய போது, வாடிக்கையாளர்கள் 87 ரூபாய்க்கு சீனியை பெற்று ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு...
Read More

அக்கரபத்தனை அரச வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் கர்ப்பினித் தாய்மார்கள் அசௌகரிகம்!

அரச பொறுப்பின் கீழ் இயங்கும் மலையக பகுதியில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர் குறிப்பாக அக்கரபத்தனை டயகம லிந்துலை ஆகிய வைத்தியசாலைகளில் இக்குறைப்பாடு காணப்படுகின்றது. இவ்வைத்தியசாலைகளை அதிகமான தோட்ட தொழிலாளர்கள் பயன் படுத்திவருகின்றனர். அரச வைத்தியசாலைகளில் இவ்வாறான குறைப்பாடுகள் காரணமாக வைத்திய அதிகாரிகளால் சம்பந்தபட்ட நோயாளர்களை தனியார்...
Read More
error: Content is protected !!