முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவனுக்கு தேசிய மட்ட விருது!

நுவரெலியா கல்வி வலயத்தின் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் ஆனந்தராஜ் ரங்கேஸ்வரன் தேசிய மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்தில் விருதினை பெற்றுள்ளார். மேற்படி மாணவன் கடந்த வருடம் கல்வி அமைச்சின் அனுசரணையுடன்  நடைபெற்றுள்ள பாடசாலைகளுக்கிடையிலான சமூக விஞ்ஞானப் போட்டியில், பாடசாலை மட்டம், கோட்டமட்டம், வலயமட்டம், மாகாணமட்ட போட்டிகளில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், தேசிமட்டத்தில் மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் பாடஆசிரியர்களான திரு.எஸ்.மகேந்திரன். திருமதி எம்.கௌசல்யாதேவி...
Read More

நெளுந்தெனிய பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல்?

கொழும்பு கண்டி பிரதான வீதியில் கஜுகமைக்கு அருகாமையில் உள்ள நெளுந்தெனிய பள்ளிவாசல் மீதே சிறிய ரக குண்டொன்றை  பெட்டிக்குள் பொருத்தி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி குண்டு வெடிப்பு தொடர்பில் பொலிசார் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் விடுக்கவில்லை.

களனி கங்கையின் நீர் மட்டம் உயரும் சாத்தியம்.. மக்களை அவதானமாக இருக்கக் கோரிக்கை!

நாட்டில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக களனி மற்றும் ஜின் கங்கையில் மீண்டும் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இதுவரை உயரவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கையில், நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. நேற்றைய தினம் காலி மாவட்டத்தின் தவலம பிரதேசத்தை அண்டிய பகுதிகளில்...
Read More

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் இலக்கு!

மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை நாளாந்த சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கியே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேரம் பேசுவதில் ஈடுபட்டு வருகின்றது என மத்திய மாகாணசபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். சம்பளத்திற்கான கூட்டு உடன்படிக்கை கடந்த ஒருவருடகாலமாக கைசாத்திடப்படாமல் இருந்து வருகிறது. பெருந்தோட்ட கம்பனிகளுடனான பல சுற்று பேச்சுவார்ததைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டு ஒப்பந்தத்தில் பங்கேற்கும்...
Read More

லிந்துலை பிரதேச இரண்டு தோட்டங்களில் மண்சரிவு அபாயம்!

நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ்ந்துள்ளதால் இந்தக் குடியிருப்புக்களைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தோட்ட நிருவாகத்தினரும் பிரதேச கிராம சேவகர்களும் அறிவித்துள்ளனர். இதே வேளை கொணன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புப் பகுதியிலும் நிலம் தாழ்ந்துள்ளதோடு சுவர்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் தோட்ட மக்கள் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக்...
Read More

அரநாயக்க பகுதியில் நாளையுடன் மீட்பு நடவடிக்கை நிறைவு!

கேகாலை அரநாயக்க பகுதியில் மேற்கொளப்பட்டுள்ள மண் சரிவு மீட்டு நடவடிக்கை நாளையுடன் நிறைவுக்கு கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்ட செயலாளர் டபுள்யு.எம்.அபேவிக்ரம வனசூரிய இதனை தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அப்பகுதி மக்கள், மத தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, மண் சரிவில் சிக்குண்ட அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும், மீட்பு...
Read More

காசல்ரீ ஒயா கரையோர மக்கள் அவதானம்!

மலையகத்தில் தொடரும் மழை கால நிலை நீடிக்கின்றமையினால் மண்சரிவுகளும் நிழ தாழிறக்கமும் அதிகமாக காணப்படுகின்றது. நீரேந்தும் பகுதிகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைகின்றது. காசல்ரீ மவுசாகலை நீர்தேக்கங்களில் நீர்மட்டம் நேற்று பெய்த தொடர் மழையில் நிறம்பி வழியும் தருவாயில் இரண்டு அங்குளம் மாத்திரமே உள்ளதாக மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்ததுடன், காசல்ரி நிர்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் வசிக்கும் காசல்ரீ ஓயா கரையோர பகுதிமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நுவரெலியா ஹோம்மூட் தமிழ் வித்தியாலய கட்டிடம் சரிந்து விழும் அபாயம்! (படங்கள்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 ஹோல்புறூக் நு.ஹோம்மூட் தமிழ் வித்தியால கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் வெளிபுர பகுதிகள் பாரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. இப்பாடசாலையில் 100 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். தரம் 01 முதல் 05 வரையிலான வகுப்புகள் நடைபெறுகின்றது. கட்டிடம் தற்போது ஆபத்தான நிலைக்காணப்படுவதால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது இப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் கட்டிடம் சரிந்து விழ கூடிய ஆபாத்தான...
Read More

“குரங்குகளின் அட்டகாசத்தால் நிம்மதி போச்சு” தலவாக்கலை மிட்டில்டனில் மக்கள் புலம்பல்!

தலவாக்கலை பொலிஸ் பகுதிற்கு உட்பட்ட தலவாக்கலை தமிழ் வித்தியாலய பிரதேசத்தில் உள்ள மிட்டில்டன் கிராமபகுதியில் குரங்குகளின் அட்டகாசத்தால் இப்பகுதியில் வாழும் மக்கள் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளை சந்திப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குரங்குகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. அதிகாலை வேளையில் பாடசாலை மாணவர்கள் நடந்து செல்லும் போது குரங்குகள் இவர்களை பின் தொடர்ந்து மாணவர்களால் கொண்டுசெல்லப்படும் பாடசாலை புத்தகப்பைகளை கிழித்து நாசப்படுத்துவதாகவும் இதனால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு...
Read More
error: Content is protected !!