முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

அல்-நூரி பள்ளிவாசலைத் தகர்த்த ஐ எஸ்

மொசூலில் உள்ள பெரிய பள்ளிவாசல் ஒன்றை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினர் வெடிவைத்து தகர்த்துவிட்டதாக ஈராக் படைகள் கூறுகின்றன. சாயும் தோற்றம் கொண்ட கோள் வடிவ கோபுரங்களைக் கொண்ட அந்த பிரபலமான இடத்தில்தான் ஐ.எஸ் . அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி 2014இல்ல் தனது இஸ்லாமிய ராஜ்யத்தை அறிவித்தார். ஆனால், இந்த வளாகத்தை அமெரிக்க விமானம் சேதப்படுத்தியது என ஐ எஸ் அமைப்பு தனது செய்தி நிறுவனமான அமாக் மூலம் வெளியிட்டுள்ள...
Read More

உலகின் மிகப்பெரிய ராட்சத விமானம், பாவனைக்கு வருகிறது!

உலக புகழ் பெற்ற மைக்ரோ-சொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான போல் எலனினால் மிகப் பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரொக்கட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 6 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தின் இறக்கைகள் 358 அடி நீளத்தை கொண்டுள்ளது. குறித்த விமானம் கால்பந்து மைதானத்தை விடவும் பெரியதாகும். இந்த திட்டத்திற்கு 300 மில்லியன் டொலர் செலவாகும் என 2011ஆம் ஆண்டு கணிப்பிடப்பட்டிருந்து. போல் எலனின் aerospace நிறுவனமே இந்த விமானத்தை தயாரித்துள்ளது. இம் விமானத்தில் கிட்டத்தட்ட 5...
Read More

விருந்தோம்பலுக்கு உதாரணமான கொக்கு..! நட்பை உணர்த்தும் கதை…

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்னும் குறளில் பிறப்பால் அனைத்து உயிர்களும் சமமானவையே என்பதை வள்ளுவர் நமக்குத் தெளிவாக விளக்குகிறார். மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே. ஆனால், அவர்களின் குணங்களே அவர்கள் நல்லவரா? தீயவரா என்பதைத் தீர்மானிக்கின்றன. மகாபாரதம், சாந்தி பருவத்தில் ஓர் அழகிய கதை இருக்கிறது. அந்தக்கதையை விரிவாகப் பார்ப்போம்.கொக்கு கௌதமன்! உயர்ந்த குலத்தில் பிறந்தவன். அவனது தந்தையோ சகல கலைகளையும் அறிந்த பண்டிதர். ஆனால். அவரது பிள்ளையான, இவனோ தீய...
Read More

திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்ததால் கைதான சீன மணமகன்

மணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று வரவழைக்கப்பட்டிருந்த 200 விருந்தினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள் என்பதை மணமகளின் குடும்பத்தினர் அறிய வந்ததை அடுத்து, சீனாவின் வட பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மணமகனின் சார்பாக வந்திருந்தோரிடம் உரையாடியபோது, அவர்கள் மணமகனுக்கு “நண்பர்கள் மட்டுமே” என்று சொன்னவர்கள், எவ்வாறு அவரை அறியவந்தனர் என்று தெளிவாக்கவில்லை. எனவே, லியு என்ற குடும்பப் பெயருடைய அந்த மணமகள் சந்தேகமடைந்தாக ஷான்ஸி மாநில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணமகனின்...
Read More

பேஸ்புக் உட்பட 22 சமூகவளைத்தளங்களுக்கு தடை!

இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில், பேஸ்புக், உள்ளிட்ட 22 சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். மக்கள் நலனை கருத்திற் கொண்டு வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையுத்தரவு ஒரு மாத காலத்திற்கு அல்லது அடுத்த கட்டளை பிறப்பிக்கபடும் வரை அமுலில் இருக்கும் என காஷ்மீரின் உள்துறை அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. காஷ்மீரில் இந்த மாதத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல், வன்முறைகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள கலவரத்தால் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இணையதளம் முடக்கம் அரசாங்கத்தால் எடுக்கப்படும் பொதுவான ஒரு...
Read More

விதியின் சதி…. இரட்டையர்கள் தம்பதிகள் ஆன சோகம்!

அமெரிக்காவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், திருமணத்துக்கு பிறகு தாங்கள் இரட்டையர்கள் என்னும் தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவர் ஜாக்சன் என்பவரிடம் ஒரு காதல் தம்பதி குழந்தை பேறு சிகிச்சைக்காக வந்துள்ளனர். ஜாக்சன் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்துள்ளார். அவர்களின் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் ஜாக்சனை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காதல் தம்பதி இரட்டையர்கள் அதாவது ஒன்றாக பிறந்தவர்கள் என்பது டி.என்.ஏ பரிசோதனையில் தெரிய...
Read More

இரட்டை இலையை விரைவில் மீட்போம்;ஓ.பி.எஸ். சூளுரை

நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று தனது இல்லத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அந்த வரிசையில் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்பொழுது ஜெயலலிதாவின் படத்திற்கு அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர்...
Read More

‘ஜெயலலிதா ஆக நினைத்து வளர்மதி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்!’ சசிகலாவுக்கு தமிழக பெண்களின் சார்பாக ஒரு கடிதம்!

”தலைவரு இறந்தபோது… அம்மாவ என்ன பாடு படுத்துனாங்க? ஒரு விஷயம் முக்கியமா கவனிக்கணும். ஒரு பெண்ணு… பெண்ணு எப்படி கட்சியில வந்து வர்றது… அப்படீங்கிறத வந்து காமிச்சாங்க. இப்பயும் அதே தோரணதான். அன்னைக்கு எந்தக் கூட்டம் அம்மாவ எதிர்த்துச்சோ… அதே கூட்டம்தான் இன்னைக்கும் செய்யுது” ஞாயிறு இரவு கூவத்தூரில் நீங்கள் பேசிய பேச்சு இது சசிகலா. பொட்டு, பிளவுஸில் தொடங்கி உங்கள் பேச்சு வரை அனைத்திலும் உங்களை நீங்கள் ஜெயலலிதாவுக்கான மாற்றாக நிறுவத் துடிக்கிறீர்கள். 30 ஆண்டுகளாக...
Read More

8 மில்லியன் பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம்!

வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்திருக்கும் குடிநுழைவு மீதிலான கடுமையான சட்டவிதிகள் காரணமாக, ஏறத்தாழ 8 மில்லியன் சட்டவிரோதக் குடியேறிகள் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் எந்த ஓர் அமெரிக்க அதிபரும் இத்தகைய அதி தீவிரமான, கடுமையான அதிரடி மாற்றங்களைப் பிறப்பித்ததில்லை என்று கூறும் அளவுக்கு டிரம்ப் செயலாற்றி வருகின்றார். இதனால் கடும் கண்டனங்களையும் சந்தித்து வருகின்றார். இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகத்தான் அமெரிக்க வாக்காளர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்தார்கள் எனக்...
Read More
error: Content is protected !!